’96’ படம் தான் என்னோட அடையாளம்.. 13ம் நம்பர் வீடு படத்தில் மிரட்ட வரும் வர்ஷா பொல்லம்மா பேட்டி!
சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உடன் 96, தளபதி விஜய்யுடன் பிகில் என கலக்கி வரும் நடிகை வர்ஷா பொல்லம்மா கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான 13ம் நம்பர் பேய் வீடு படத்தில் மிரட்டி உள்ள வர்ஷா பொல்லம்மா கொடுத்துள்ள இந்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய பதிவுகள் அடங்கி உள்ளன.

'வி' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து விஜய் சேதுபதி, விஜய், விஜய் தேவரகொண்டா என நீங்கள் பணியாற்றும் நடிகர்களின் பெயர்களும் 'வி' என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதே என்ற கேள்விக்கு, சின்ன வயசுல இருந்தே 'வி' ஃபார் விக்டரி என கெத்தா சொல்லி சுத்திக்கிட்டுத் தான் இருப்பேன். சினிமாவிலும் அது தானா அமைஞ்சது நல்ல விஷயம் என்றார்.
நீங்கள் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், உங்களுக்கு ரொம்ப பிடித்த படம் எது என்கிற கேள்விக்கு, கொஞ்சம் கூட யோசிக்காமல், இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் தான் ஆல் டைம் ஃபேவரைட் என்றார்.
அமேசான் பிரைமில் வர்ஷா பொல்லம்மா நடிப்பில் அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான 13ம் நம்பர் பேய் வீடு படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றியும் வெகுவாக பகிர்ந்து கொண்ட இந்த பேட்டியை மிஸ் பண்ணாமல் கண்டு ரசியுங்கள்.


Click it and Unblock the Notifications