Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாஸ்கோடகாமா தான் டிஎஸ்பியாக மாறியுள்ளது.. விஜய்சேதுபதி படத்திற்கு பெயர் விளக்கம் கொடுத்த இயக்குநர்!
சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, புகழ், நடிகை அனுகீர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிஎஸ்பி.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என காமெடி கலந்த படத்தை இயக்கிய பொன்ராம், ஆக்ஷன் படமாக டிஎஸ்பி படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கார்த்தி
படத்துக்கு
நோ
சொன்ன
நயன்தாரா..
எதுக்காக
தெரியுமா?

தலைப்பு பெரியது
கேள்வி: படத்திற்கு டிஎஸ்பி என பெயர் வைக்க காரணம் என்ன?
பதில்: இந்த படத்திற்கு நான் முதன் முதலில் வைத்த பெயர் வாஸ்கோடகாமா. தலைப்பு பெரிதாக இருப்பதாகவும், எல்லோரும் வேண்டாம் என்று கூறினார்கள். சிறியதாகவும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர். அதனால் தான் டிஎஸ்பி என்று பெயர் வைத்தேன் என்றார்.

ஆக்ஷன் படம்
கேள்வி: எதற்காக புதுமுகம் அனுகீர்த்தி?
பதில்: பொதுவாக எனது படங்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு சமஅளவில் முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். ஆனால் இந்த டிஎஸ்பி படமானது ஆக்ஷன் படமாகும். இதில் வில்லனுக்கும், கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் அளித்திருப்பேன். எனவே இப்படத்திற்கு புதுமுக கதாநாயகியை தேடினேன். கதாநாயகியின் கதாபாத்திரமானது விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு, அதன் மூலம் அரசு வேலை தேடும் நபர். எனவே உயரமான பெண் வேண்டும் என்பதால் அனுகீர்த்தி பொருத்தமாக இருந்தார் என்றார்.

அதிகமான காட்சிகள்
கேள்வி: இப்படத்தில் நடிகர் புகழின் கதாபாத்திரம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
பதில்: நான் முதலில் கூறியதுபோல் இந்த படமானது ஆக்ஷன் படம். ஆக்ஷனுடன் கலந்து காமெடி, காதல் போன்றவை இடம்பெறுகிறது. நீளமான காமெடி படத்தில் கிடையாது. நடிகர் புகழ் மற்ற படங்களை விட இந்த படத்தில் அதிகமான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படமான அவருக்கு மைல்கல்லாக அமையும் என்றார்.

நான் கவிஞன் அல்ல
கேள்வி: நல்லா இரும்மா பாடலுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?
பதில்: டிஎஸ்பி படத்தின் நல்லா இரும்மா என்ற பாடலை வெளியிட்டோம். ரசிர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரவேற்பு கிடைக்கும்போது தான் நமக்கு நம்பிக்கையும் வருகிறது. பூமி இருக்கும்வரை காதலும், காதல் தோல்வியும் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த பாடல் அதற்கு எந்த காலக்கட்டத்திலும் உறுதுணையாக இருக்கும். நான் சினிமாத்துறையில் நுழையும்போது பாட்டு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தேன். முதலில் கவிதை, அதன் பிறகு பாடல், பிறகு கதை என்று தான் உருவாகும். பாடல் எழுதவேண்டும் என்று யுகபாரதி, இமான் ஆகியோரிடம் ஏற்கனவே கூறியிருந்தேன். பாடல் எழுதி வைத்திருந்தேன். நான் ஒன்றும் கவிஞன் இல்லை. அதனால் பாடல்களில் மேடு, பள்ளங்கள் காணப்பட்டன. இமான் பாடலை வாங்கி அதை சரி செய்து அருமையாக வடிவமைத்து கொடுத்துள்ளார். ஒரு படத்தில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். சில படங்களில் மட்டுமே ஆல்பமே வெற்றி பெறும். என்னை பொறுத்தவரை முதல் பாடல் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
84 மணி நேரம் உழைப்பு
கேள்வி: கிளைமாக்ஸ் காட்சி எடுக்க சிரமப்பட்டதாக கூறுகிறீர்களா? உண்மையா?
பதில்: படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இக்கட்டான சூழ்நிலையில் படமாக்கினேன். ஏனென்றால் கிளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்கு 6 நாட்கள் தேவைப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி, காத்து வாக்குல இரண்டு காதல், ஹிந்தி படம் என்று பிஸியாக இருப்பதால் 4 நாட்கள் தருகிறேன், முடித்து விடுவீர்களா என்று கேட்டார். நீங்கள் இரவு, பகல் நடித்து கொடுத்தால் முடித்து விடுவேன் என்றேன். அவரும் இரவு, பகலாக நடித்து கொடுத்தார். தொடர்ச்சியாக 84 மணி நேரம் எனது உதவி இயக்குனர்கள் பணிபுரிந்தனர். பாலகுரு என்ற உதவி இயக்குனர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இப்படத்திற்கு அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியும் மிக அற்புதமாக வந்துள்ளது என்றார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/PesKrXGa7ps இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.