அவங்க இருக்காங்க.. அப்போ பயம் இல்லை.. ’வெல்வெட் நகரம்’ நடிகை மாளவிகா சுந்தர் பளீச் பேட்டி!
சென்னை: பாடகியாக இருந்து நடிகையாக மாறியுள்ள மாளவிகா சுந்தர் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
இயக்குநர் மனோஜ் இயக்கத்தில், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெல்வெட் நகரம்.

இந்த படத்தில் தான் நடிகையாக அப்கிரேட் ஆகியுள்ளார் பாடகி மாளவிகா சுந்தர். நாடகங்களில் அவ்வப்போது நடித்து வந்த மாளவிகாவின் நடிப்பை பார்த்து, வியந்த இயக்குநர் மனோஜ், தனது வெல்வெட் நகரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

நாடகங்களில் நடிப்பது போல, சினிமா இருக்காது என்று தனக்கு தெரியும் என்றும், அதன் மீட்டர்களை புரிந்து கொண்டு நடிப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. ஆனால், இயக்குநர் மனோஜ், அதையெல்லாம் சுலபமாக்கி விட்டார் என்று தனது பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும், நடிக்க தன்னை தொடர்பு கொண்ட போது, யார் நடிக்கிறாங்க? யாருடைய படம்? என்று பல கேள்விகளை எழுப்பினேன். வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக நடிக்கும் படம் என்று இயக்குநர் சொன்னதும், பரவாயில்லை அவங்க இருக்காங்க.. அப்போ பயம் இல்லை என நினைத்துக் கொண்டு ஓகே சொல்லியது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை மாளவிகா பகிர்ந்துள்ளார்.
முழு வீடியோவையும் கண்டு மகிழ, வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











