”ரெஜினாவுக்கு ஓகேன்னா.. எனக்கு ஒகே” பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் ‘கசட தபற’ பேட்டி!

சென்னை: சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியான 'கசடதபற' படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிம்புதேவனின் புதிய படம் 'கசட தபற' வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் 6 கதைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பல அற்புதமான தருணங்களை திரையில் கொண்டு வந்து ரசிக்க வைத்துள்ளது.

ஆந்தாலஜி இல்லை

ஆந்தாலஜி இல்லை

கசட தபற திரைப்படம் ஆந்தாலஜி திரைப்படம் இல்லை. சிம்புவின் வானம் படத்தை போல 6 தனித் தனி கதைகள் ஒன்றாக ஒரு புள்ளியில் இணைவது போல இந்த படம் வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, பிரியா பவானி சங்கர், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலக்‌ஷ்மி, ஜனணி, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கசட தபற டீம் பேட்டி

கசட தபற டீம் பேட்டி

இயக்குநர் சிம்புதேவன், வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி கலந்து கொண்டு கலகலப்பான 'கசட தபற' டீம் பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் வழக்கம் போல தங்கள் பாணியில் கலாட்டா செய்துள்ளனர்.

பிரேம்ஜிக்கு ரெஜினா ஜோடி

பிரேம்ஜிக்கு ரெஜினா ஜோடி

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அசத்தி வரும் முன்னணி நடிகை ரெஜினா கசாண்ட்ரா இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரேம்ஜிக்கு ஜோடியாக நடிக்க அவர் ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். பல முன்னணி நடிகைகள் என் கூட நடிக்க மறுத்த நிலையில், ரெஜினா நடித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேம்ஜி இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கை மேல வரக் கூடாது

கை மேல வரக் கூடாது

பிரேம்ஜியை பல படங்களில் நடிக்க வைத்துள்ள அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் பிரேம்ஜியை சிம்புதேவன் நடிக்க வைக்க என்ன மெனக் கெட்டார் என்ற கேள்விக்கு, "கை மட்டும் மேல வரக் கூடாது" என ஸ்ட்ரிட்டாக உத்தரவு போட்டு விட்டார் என்றும், அதன் பிறகு நடிக்கும் போது 100 சதவீதம் நடிக்கிறீங்க.. எனக்கு அதில் 40 சதவீதம் நடிச்சா போதும் என என்னுடைய ஓவர் ஆக்டிங்கை எல்லாம் சிம்புதேவன் அவருக்கு ஏற்றார் போல மாற்றி வேலை வாங்கிவிட்டார் என்று செம கூலாக பிரேம்ஜி கூற சிம்பு தேவனும் அதனை ஆமோதித்தார்.

ரெஜினாவுக்கு ஓக்கேன்னா

இந்த படத்தில் பிரேம்ஜிக்கு ரெஜினா கசாண்ட்ரா ஜோடியாக நடித்துள்ள நிலையில், படத்தில் நடந்ததை போலவே நிஜத்திலும் சீக்கிரம் திருமணம் ஆகட்டும் என தொகுப்பாளர் வாழ்த்த, "ரெஜினாவுக்கு ஓகேன்னா.. எனக்கும் ஓகே" என பேட்டியிலேயே ரெஜினாவை புரபோஸ் செய்துள்ளார் பிரேம்ஜி. பிரேம்ஜியின் இந்த ஆசைக்கு ரெஜினா என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், கசட தபற படத்தில் நடிகராக ஜொலித்துள்ள பிரேம்ஜிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இனி வரும் படங்களிலும் கையை தூக்காமல் தொடர்ந்து நடிப்பாரா பிரேம்ஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X