GOAT: அடுத்த சீன் என்ன வரும்னு சொல்லவே முடியாது.. டிரெய்லரில் உள்ள ரகசியம்.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. பொதுவாக விஜய் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக ஆடியோ லான்ச் உள்ளிட்ட புரோமோஷன்கள் பிரமாண்டமாக இருக்கும் ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தடை ஏற்பட்ட நிலையில், அந்த விழா ரத்தானது.

இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் என்கிற முடிவையே விஜய் எடுத்துள்ளார். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடித்த லைலா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.

goat vijay venkat prabhu

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பெரியளவில் படத்தை புரமோட் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நார்த் இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் எல்லாம் கோட் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

வெங்கட் பிரபு பேட்டி: மங்காத்தா, மாநாடு படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வெங்கட் பிரபு தளபதி விஜய்யை வைத்து ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வெங்கட் பிரபு பேட்டியளித்துள்ளார்.

டிரெய்லரிலேயே இருக்கு: கோட் படத்தின் ஜானர் என்னவென்பது டிரெய்லரிலேயே தெளிவாக காட்டியிருக்கிறேன். ஆனால், யாரும் இன்னமும் அதை டீகோட் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். படம் ஸ்லோவாகவே இருக்காது, ஜெட் வேகத்தில் செம ஃபாஸ்ட்டாக ஓடிக் கொண்டே இருக்கும். ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

மங்காத்தா படத்தை விட: மங்காத்தா படத்தில் எமோஷனல், ஃபேமிலி டிராமா எல்லாம் இருக்காது. பாய்ஸ் அவங்களுக்குள்ள ஃபேக் ஸ்டேபிங் பண்றது தான் படமாக இருக்கும். ஆனால், கோட் படத்தில் ஒரு ஃபேமிலி மேன் வாழ்க்கையில் அவர் செய்த ஒரு மிஷினால் ஏற்படும் பாதிப்புகளும் அதை அவரே எப்படி சரி செய்கிறார் என்பதும்தான் கதை எனக் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

கெஸ் பண்ணவே முடியாது: அடுத்த சீன் இதுதான் வரும், இன்டெர்வெல் இப்படித்தான் இருக்கும், கிளைமேக்ஸ் இப்படித்தான் முடியும் என கெஸ் பண்ண முடியாத அளவுக்கு ஒரு ஸ்க்ரீன்பிளேவை எழுதி படமாக எடுத்திருக்கிறேன். நிச்சயம் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஆடியன்ஸ்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X