"நீ குச்சி ஊன்ற வரைக்கும் நடிச்சுகிட்டு இருப்ப..ஜோதிடர் சொன்னது பளித்தது.. வெண்ணிற ஆடை மூர்த்தி!

சென்னை : நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தமிழ் சினிமாவில் பழம் பெரும் மூத்த நடிகர். இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார்.

வழக்கறிஞர் ஆவதற்காக படித்த வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவின் மீது கொண்ட காதலால் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிக பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் திரைத்துறைக்குள் வந்த அதிசயத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அடைமொழியோடு

அடைமொழியோடு

பிரபல இயக்குனர் சிபி ஸ்ரீதர் இயக்கிய "வெண்ணிற ஆடை" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த மூர்த்தி பின் பலராலும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

ரசிகர்களின் ஆதரவோடு

ரசிகர்களின் ஆதரவோடு

நடிகை ஜெயலலிதா மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து இருந்த இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றது.

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்

இவ்வாறு தனது முதல் காலடியை பதித்த வெண்ணிற ஆடை மூர்த்தி இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

சமூக கருத்தையும்

சமூக கருத்தையும்

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "மீண்டும் மீண்டும் சிரிப்பு" என்ற நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் சிரிக்க வைத்ததோடு கடைசியில் சமூக கருத்தையும் வைத்து இன்றளவும் பலராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறார்.

வழக்கறிஞராக ஆசைப்பட்டு

வழக்கறிஞராக ஆசைப்பட்டு

தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பிரபலமான சீனியர் கிரிமினல் வழக்கறிஞரான கே ஆர் நடராஜ சாஸ்திரி என்பவரின் மகனாவார். இவரது அப்பா, வெண்ணிற ஆடை மூர்த்தியையும் தன்னைப் போலவே வழக்கறிஞராக்க ஆசைப்பட்டு வழக்கறிஞருக்கு படிக்க வைத்தார்.

அஸ்ட்ராலஜி பத்திரிக்கை

அஸ்ட்ராலஜி பத்திரிக்கை

ஆனால் வழக்கறிஞர் ஆவதில் பெரிதும் நாட்டமில்லாத வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒரு நாள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கேண்டினில் சாப்பிடப் போகும்போது எதர்ச்சையாக ஒரு அஸ்ட்ராலஜி பத்திரிக்கையை பார்த்து வாங்கியும் படித்துள்ளார்.

சந்திக்க வருமாறு

சந்திக்க வருமாறு

"அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்ட" என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த பத்திரிக்கையை பார்த்து எதிர்காலத்தில் நடப்பதை எப்படி இவர் சரியாக கணிக்கிறார் என்ற சந்தேகத்தில் அந்த ஜோதிடரை இவர் பார்க்க முற்பட, அவரும் கேட்கும்போதெல்லாம் சில நாட்கள் தள்ளிப் போட்டு பின் ஒரு நாள் இவரை சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார்.

சினிமால தான் நடிப்ப

சினிமால தான் நடிப்ப

ஆர்வத்துடன் போன வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரைப் பற்றிய முழு தகவலையும் புட்டு புட்டு வைத்த அந்த ஜோதிடர், பின் இவரை பார்த்து "உனக்கு "லா" எல்லாம் வெறும் அம்பரல்லா தான்.. நீ மேக்கப் போட்டு சினிமால தான் நடிப்ப" எனக்கூற வெண்ணிற ஆடை மூர்த்தி அதை நம்பாமல் எனக்கு பேப்பரில் எழுதித் தாருங்கள் எனக் கேட்க அந்த ஜோதிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

நன்றி சொல்ல

நன்றி சொல்ல

சில மாதங்கள் கழித்து ஜோதிடர் சொன்னது போலவே தனது முதல் திரைப்படமான "வெண்ணிற ஆடை"யில் நடித்தார். இவ்வாறு தனது முதல் திரைப்படத்தில் நடித்த ஆனந்தத்தில் அந்த ஜோதிடரை பார்த்து நன்றி சொல்ல மீண்டும் போன வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் "நீ குச்சி ஊன்ற வரைக்கும் நடிச்சுகிட்டு இருப்ப உன் கூட நடிக்க வந்தவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிடுவாங்க ".

நடுத்தெருவுக்கு வந்துடுவ

நடுத்தெருவுக்கு வந்துடுவ

" ஒருவேளை நடிப்பை விட்டுட்டு வேற வேலைக்கு சென்றால் அங்கு நீ நிறைய சம்பாதிப்ப ஆனா சீக்கிரமே நடுத்தெருவுக்கு வந்துடுவ". இதுதான் உனக்கு விதிக்கப்பட்ட வேலை அதை சரியாக செய்". என சொன்னவர் உனக்கு ஜோதிடமும் வரும் கற்றுக்கொள் எனக்கூற அதையும் கற்றுக் கொண்டுள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

நடிக்க வந்ததையும்

நடிக்க வந்ததையும்

இவ்வாறு தான் சினிமாவில் நடிக்க வந்ததையும் ஜோதிடம் என்ற கலையை கற்றுக் கொண்டதையும் பற்றிய யாரும் அறியாத தகவலை அந்தப் பேட்டியின் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்த அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X