மகனுக்காகவும் மகளுக்காகவும் ஏங்கிய தந்தை... நெஞ்சை வாட்டிய வேதனை.. பாக்யராஜின் நிறைவேறாத ஆசை!

சென்னை: இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனத் பன்முகத் திறமைகளால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, தனக்கு லேசான நெஞ்சு வலிப்பதாகக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. தற்போது அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகப் பின்னணிகள் பலரையும் உலுக்கியுள்ளது.

பிரவீணா மறைவு: கே. பாக்யராஜ் 1981-ம் ஆண்டு நடிகை ப்ரவீனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 1983-ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரவீணா உயிரிழந்தார். அதன் பிறகு, தனது படங்களில் ஜோடியாக நடித்த நடிகை பூர்ணிமாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில், அவரே தாலி எடுத்துக் கொடுக்க மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Bhagyaraj death

சாந்தனு பாக்யராஜ்: இந்த தம்பதிகளுக்குச் சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். பெற்றோரைப் போலவே சினிமாவில் நடிக்க வந்த சாந்தனு, பிரபல தொகுப்பாளினி கிகியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தன் மகனுக்கு சினிமாவில் ஒரு பெரிய வெற்றிக் படத்தைக் கொடுக்க முடியவில்லையே என்கிற வருத்தம் பாக்யராஜுக்குள் எப்போதும் இருந்தது.

தீராத கவலை: மகன் சாந்தனுவை விட, பாக்யராஜின் கவலையும், வேதனையும் அவரது மகள் சரண்யாவைப் பற்றித்தான் இருந்தது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறால்கள். பாக்யராஜ் தானே இயக்கிய 'பாரிஜாதம்' என்ற படத்தின் மூலம் தன் மகள் சரண்யாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்தப் படத்திற்குப் பிறகு சுமார் 18 ஆண்டுகள் சரண்யா எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்றே தெரியாமல் ஒட்டுமொத்தமாகத் திரையுலகை விட்டு ஒதுங்கி மர்மமாக இருந்தார். பலர் அவரை மறந்தே போன சூழ்நிலையில், யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்த சரண்யா, தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும், தான் கடந்த காலத்தில் கடுமையான மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும், கடைசி நேரத்தில் அம்மா, அப்பா தான் தன்னைக் காப்பாற்றினார்கள் என்றும் கூறினார்.

Bhagyaraj death

வாட்டி வதைத்த வேதனை: மேலும், அந்த குழந்தையின் தந்தை யார்? சரண்யா யாரை எப்போது திருமணம் செய்து கொண்டார்? இப்போது அவருடன் வாழ்கிறாரா? போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தார். தற்கொலை முயற்சியில் இருந்து மீண்ட தன் மகள், இப்போது சினிமாவிற்குப் பின்னால் தனக்கும் பூர்ணிமாவிற்கும் உதவியாக இருந்தாலும், தனக்குப் பின்னால் தன் மகளுக்கு ஒரு நல்ல நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே, அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லையே என்கிற கவலை பாக்யராஜை உள்ளுக்குள் வாட்டி வதைத்து வந்தது.

கடைசி ஆசை: தன் மகளுக்கு எப்படியாவது ஒரு பாதுகாப்பான, நல்ல வாழ்க்கையைத் தன் கண்ணெதிரே அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாக்யராஜ். ஆனால், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலே, கவலையுடனேயே அவர் கண்ணை மூடிவிட்டது தான் வேதனையின் உச்சம் என அஞ்சலி செலுத்த வந்த திரையுலகப் பிரபலங்கள் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X