எட்டு வருட காதல்.. பின் காத்திருந்து திருமணம்.. ஆர்த்தி சுவாரசிய தகவல்
Recommended Video
சென்னை : வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி அவரை பற்றி கூறிய சில சுவாரசியத் தகவல்கள்
பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த முத்து தான் வெற்றிமாறன். தற்போது தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றி மாறன் பல படங்களில் மற்றும் தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றறி இருக்கிறார்.

பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த முத்து தான் வெற்றிமாறன். தற்போது தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றி மாறன் பல படங்களில் மற்றும் தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
பின் தனுஷூக்கு கதை சொல்லி , அந்த படம் தான் தனுஷ் நடித்த பொல்லாதவன், இந்த படம் வெற்றி மாறனுக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது. பல தயாரிப்பாளர்கள் மாற மாற வெற்றிமாறனால் படம் எடுக்க முடியவில்லை.

அடுத்து மூன்று வருட இடைவேளைக்குப்பிறகு தனுசை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார் அந்த படமும் வெற்றி பெற்றது. தற்போது இவர் வெற்றி இயக்குனர்கள் வரிசையில் உச்சம் தொட்ட ஒரு இயக்குனராக உள்ளார். இவரை பற்றி அவரின் மனைவி ஆர்த்தி ஒரு பேட்டியில் சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

அவரை முதன் முதலாக சென்னையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தான் சந்தித்தேன். பின் நான் தான் அவரிடம் முதலில் என் காதலை சொன்னேன்.அவர் என்னை ஒரு பத்து வருடங்களுக்கு பொறுமையாக காத்திரு, அதுக்கு அப்புறம் கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால், அதற்குள் உனக்கு மனது மாறினால் நீ வேறு கல்யாணம் செய்து கொள் என்று கூறினார். இதனை அடுத்து எட்டு வருடங்கள் கழித்து தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்றார்.

நாங்கள் இருவரும் காதலித்த சமயத்தில் எனக்கு வேலை கிடைத்தது. நான் போக மாட்டேன் என்று அவரிடம் கூறினேன். அவர் நம் காதல் உன்னுடைய வேலை மற்றும் என்னுடைய கனவை கலைப்பதாக இருந்தால் நாம் காதலிக்க வேண்டாம் என்று கூறினார். உடனே நானும் வேலைக்கு சென்று விட்டேன் என்று வெளிப்படையாக கூறினார் ஆர்த்தி வெற்றி மாறன்.


Click it and Unblock the Notifications











