வாடிவாசல் படம் டிராப்பா?.. சிம்பு படம் தொடங்கியது ஏன்?.. தனுஷ் காசு கேட்டாரா?.. வெற்றிமாறன் விளக்கம்!

சென்னை: கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ஆரம்பிப்பார் என எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து படம் இயக்கி வருவது தமிழ் சினிமாவையே பரபரப்பாக்கியுள்ளது.

குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அடுத்து வடசென்னை 2 படம் தான் என தனுஷ் வெளிப்படையாக பேசிய நிலையில், திடீரென சிம்புவை வைத்து வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை பண்ணுகிறாரா என்கிற கேள்விகள் எழுந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Vetrimaaran gives full clarification about Vaadivaasal delay and Dhanush NOC issue on Simbu movie
Photo Credit:

சினிமா வட்டாரத்தில் சிம்புவை வைத்து வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை எடுத்து வருகிறார் என்றும் அதற்காக தனுஷ் NOC தர 20 கோடி வரை பணம் கேட்டதாகவும் தகவல்கள் பரவ, அவை அனைத்தும் ஊகம் தான் என்றும் உண்மையல்ல என வெற்றிமாறன் சற்றுமுன் தனது முழுமையான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

வாடிவாசல் தள்ளிப்போக காரணம்: 3 ஆண்டுகளுக்கு முன்பே வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியாகியும் இன்னமும் அந்த படம் ஆரம்பிக்கப்படவே இல்லை. தனது எழுத்துப் பணிகள் காரணமாகவும், டெக்னாலஜி காரணமாகவும் நடிகர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு கருதியும் வாடிவாசல் படம் உருவாக இன்னமும் நேரம் தேவைப்படுகிறது. அதனால், தாணு சார் தான் சிம்புவுடன் படம் பண்றீங்களா எனக் கேட்கவும், அனைத்தும் சரியான புள்ளியில் வந்து அமைய இந்த படத்தை ஆரம்பித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

வடசென்னை யூனிவர்ஸில் சிம்பு: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கயாடு லோஹர் நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த படம் அப்படியே டிராப் ஆனது. உடனடியாக தனது கால்ஷீட்டை சிம்பு வெற்றிமாறனுக்கு கொடுத்துவிட்டார். சிம்புவை வைத்து ஸ்டாண்ட் அலோன் படமாக பண்ணலாமா? அல்லது வடசென்னை யூனிவர்ஸில் படம் பண்ணலாமா? என்கிற யோசனையில் வடசென்னை உலகின் மொத்த உரிமையும் வைத்திருக்கிற தனுஷிடம் பேசினேன், அவர் உங்களுக்கு கிரியேட்டிவாக எது சரி என படுகிறதோ அதை செய்யுங்கள் என்றுக் கூறிவிட்டார்.

தனுஷ் பணம் கேட்டாரா?: சிம்புவை வைத்து வடசென்னை படத்தை மையப்படுத்திய படமாக வெற்றிமாறன் எடுத்து வரும் படத்துக்கு தனுஷ் NOC கொடுக்க பணம் கேட்டார் என தவறான ஊகத்தின் அடிப்படையில் சில யூடியூப் சேனல்கள் பேசி வருகின்றன. ஆனால், அவை உண்மையில்லை. சிம்புவை வைத்து தாராளமாக வடசென்னை உலகில் படம் பண்ணுங்க என்றும் ஒரு பைசா கூட வேண்டாம் என்றும் தனுஷ் சொல்லிவிட்டார். பொல்லாதவன் படத்தில் இருந்து இல்லை, பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனாக்காலம் படத்தில் உதவி இயக்குநராக நான் பணியாற்றும் போதிலிருந்தே தனுஷ் என்னுடைய நல்லதுக்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு படத்துக்காக எங்களுடைய நட்பு எந்தவகையிலும் கெட்டுப் போகாது என அழுத்தம் திருத்தமாகவே வெற்றிமாறன் ஒட்டுமொத்த விளக்கத்தையும் கொடுத்து விட்டார்.

தயங்கிய சிம்பு: சில நாட்களுக்கு முன் சிம்பு என்னை வந்து சந்தித்தார். யூடியூபில் இப்படியெல்லாம் பேசுறாங்க, தனுஷுக்கும் உங்களுக்கும் இடையேயான நட்பு என்னால் கெட்டுப் போய் விடக் கூடாது. நீங்கள் ஸ்டாண்ட் அலோன் படம் எடுத்தால் கூட நான் நடிக்க ரெடி என்றார். அவரிடமும் நடந்ததை சொல்லிவிட்டேன். சீக்கிரமே இந்த படத்தை ஆரம்பித்து நல்லபடியாக முடித்துக் கொடுப்பேன் என வெற்றிமாறன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X