ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கல.. வெற்றிமாறன் ஓபன்.. இத்தனை படங்களுக்கு சம்பளமே வாங்கலையா?

சென்னை: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் மேற்பார்வையில் விகர்ணன் அசோக் மாஸ்க் படத்தை இயக்கியுள்ளார்.

மாஸ்க் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில், இந்த படத்துக்கு இசையமைத்ததற்காக ஜி.வி. பிரகாஷுக்கு இதுநாள் வரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை என்று பேசியுள்ளார்.

Vetrimaaran reveals he won t give even one rupee to GV Prakash for Mask movie

கலைக்காக சில படங்களுக்கு காசு வாங்காமல் வேலை பார்த்திருக்கிறேன் என்றும் எந்த எந்த படங்களுக்குத் தான் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தேன் என்பதையும் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜி.வி. தான் மியூசிக் போடணும்: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படம் அடுத்த வாரம் நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவான கவின் அதன் பின்னர் ஸ்டார், ப்ளடி பெக்கர், கிஸ் என தொடர்ந்து பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், வெற்றிமாறன் மேற்பார்வையில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசை அமைந்தால் படத்துக்கு நல்லா இருக்கும் என நினைத்து வெற்றிமாறன் கேட்ட உடனே ஜி.வி. பிரகாஷ் இந்த படத்துக்கு பணியாற்ற சம்மதம் தெரிவித்தார் என சமீபத்திய பேட்டியில் வெற்றிமாறன் வெளிப்படையாக பேசினார்.

ஒரு ரூபாய் கூட தரல: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். பொதுவாகவே படங்களுக்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் கவின் படத்துக்காக ஒரு ரூபாய் கூட இதுவரை வாங்கவில்லை என்றும் தான் தரவில்லை என்றும் வெற்றிமாறன் ஓபனாக பேசியுள்ளார். முன்னதாக விசாரணை படத்தில் பணியாற்றும் போது கூட ஜி.வி. பிரகாஷ் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றார்.

இத்தனை படங்களுக்கு காசே வாங்கவில்லை: சில சமயங்களில் பணத்தை தாண்டி கலைக்காக வேலை பார்ப்போம். மாஸ்க், விசாரணை உள்ளிட்ட படங்களுக்கு மட்டுமல்ல சைவம், காக்கா முட்டை, அநீதி உள்ளிட்ட நல்ல படங்களுக்கும் தான் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்பதை ஜி.வி. பிரகாஷும் கேஷுவலாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X