வேட்டையன் கிளைமேக்ஸில் திடீரென ஹெலிகாப்டர் சீன் ஏன்?.. இயக்குநர் ஞானவேல் சொன்ன நச் பதில்!

சென்னை: அசோக் செல்வனை வைத்து கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் த.செ. ஞானவேல். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

அந்த படம் ஆஸ்கர் கதவுகள் வரை தட்டி பலருக்கும் பிடித்தமான படமாக மாறியது. ஜெய்பீம் படத்துக்காக ஆஸ்கர் யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

vettaiyan rajinikanth tj gnanavel

மீண்டும் சூர்யாவுடன் இணைய இருந்த இயக்குநர் ஞானவேலுவுக்கு திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம் நாம் அடுத்த படம் பண்ணலாம் என சூர்யாவை அனுப்பி வைத்த நிலையில் வேட்டையன் படத்தை இயக்கினார். அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படத்தின் இரண்டாம் பாதி குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில் அது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஞானவேல் பதிலளித்துள்ளார்.

முதல் பாதி வேற லெவல்: ரஜினிகாந்த் படத்தை பார்க்க வந்த ரசிகர்களை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் படத்தின் தொடக்கத்திலேயே பகத் ஃபாசில் பில்டப் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தெறி மாஸான என்ட்ரியும் அதிரடியான சண்டை காட்சியும் அதனைத் தொடர்ந்து வரும் அனிருத்தின் மனசிலாயோ பாடல் என தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு ரசிகர்களுக்கான படமாக வேட்டையன் படத்தை கொடுத்துவிட்டு அதன் பின்னர் கதைக்குள் செல்லும் ஞானவேல் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக முதல் பாதியை கொடுத்த வகையில் ஸ்கோர் செய்துள்ளார்.

இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை: முதல் பாதியில் இருந்த டீட்டெய்லிங் மற்றும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் படம் இன்னொரு கதையை நோக்கி நகரும் இடத்தில் சற்றே ரசிகர்களை கவரவில்லை. கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் படம் இன்னும் க்ரிப்பாக இருந்திருக்கும் என்றும் கிளைமாக்ஸில் வரும் அந்த ஹெலிகாப்டர் சீன் எல்லாம் ஞானவேல் படத்துக்கு செட்டாகவில்லையே ஏன்? என்கிற கேள்விகளை இயக்குநரிடமே வைத்த நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

ஹெலிகாப்டர் சீன் என்ன லாஜிக்?: போலீஸார் கஸ்டடியில் இருந்து தப்பிக்கும் ராணா ஹெலிகாப்டரில் இருந்து தப்பிச் செல்ல நினைக்கும் போது நடக்கும் செம மாஸான சீன் ஞானவேல் படமாக தெரியவில்லையே என்றும் லாஜிக் மீறல்கள் அதிகம் உள்ளதே என்கிற கேள்விக்கு கன்டென்ட் பகுதியில் லாஜிக் வைக்கலாம். சூப்பர் ஸ்டார் ஸ்டார்டம் பகுதியில் லாஜிக் எப்படி வைப்பது எனக் கூறியுள்ளார் ஞானவேல்.

ராக்கெட்ல போனால் கூட: ரஜினிகாந்த் ராக்கெட்டில் போனால் கூட அதுவும் ரசிகர்களை திருப்திப்படுத்தத்தான் செய்யும். அங்கே லாஜிக்கை மீறிய ரஜினிஸத்தை கொடுக்கவே அந்த காட்சியை அப்படி வைத்தேன் என நச்சென பதில் அளித்துள்ளார் வேட்டையன் படத்தின் இயக்குநர் ஞானவேல்.

மக்கள் கொண்டாடுறாங்க: நீட் தேர்வு, ஆன்லைன் கல்வி மோசடி, என்கவுன்டருக்கு எதிரான கருத்து, சாதாரண மக்களை போலீஸார் வழக்குகளில் ஃபிரேம் பண்ணும் விஷயம் என அனைத்து பிரச்சனைகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஞானவேல் சொல்லியிருப்பது தரமான சம்பவம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X