சுள்... வெயில் "கத்திரிவெயில் காலத்தில் "வெயில் என்றொரு படம் ரீலிசாகிறதுஇயக்குனர் ஷங்கரின் "எஸ் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் "வெயில். ஷங்கரின்அசிஸ்டென்டும், ஆல்பம் திரைப் படத்தின் இயக்குனருமான வசந்த பாலன் தான் வெயில் படத்தை இயக்குகிறார்.பரத் தான் ஹீரோ. பிரியங்கா, பாவனா, எஸ்.எஸ்.மியூசிக் ஸ்ரேயா ரெட்டி என படத்தில் மூன்று ஹீரோயின்கள்.திருக்ழுக்குன்றம், மதுரை, விருதுநகர் பகுதிகளில் படபிடிப்பை முடித்த பின் இறுதி கட்ட படபிடிப்பிற்காகஇக்குழுவினர் விருதுநகர் வந்துள்ளனர். படத்தில் வெயிலோடு கலந்து, வெயிலோடு உறவாடி, வெயிலோடு முட்டி மோதி என முழுக்க முழுக்க வெயிலைபற்றியே ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.விருதுநகர் தெருக்களின் சந்துக்களை மையமாக வைத்தும் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. (இயக்குனரின்சொந்த ஊரும் இதுவே).ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகனும், அவரிடம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவருமான பிரகாஷ்இசையமைப்பாளராக இதில் அறிமுகமாகிறார். நா.முத்துக்குமார் தான் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.வெயிலைப்பற்றி கேட்டால் நான் ஸ்டாப்பாக பேசுகிறார் இயக்குனர் வசந்தபாலன். விருதுநகரில் வெயிலோடு நடக்கும் ஒரு கதையை படமாக்குகிறோம். மற்ற எந்த மாவட்டங்களிலும் இல்லாதஅளவிற்கு கடுமையான வெயில் கந்தக பூமியான விருதுநகரில் மட்டுமே இருக்கும். இங்கு மட்டும் தான்வெயிலுக்காகவே வெயிலுக்கந்தம்மன் கோயில் உள்ளது.மண்ணோடும், மக்களோடும் இணைந்த, கலந்த ஒரு கதையை திரைபடமாக்குகிறோம். சினிமா உலகத்திற்கு தெரியாத எவ்வளோ விஷயங்கள் விருதுநகரில் உள்ளன.எதார்த்தமான படங்களை எடுக்க விரும்புகிறேன். படத்தை நல்ல வெயில் காலமான ஜூனில் படத்தை வெளியிடதிட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.ரொம்ப சுடும் போலிருக்கே..
"கத்திரிவெயில் காலத்தில் "வெயில் என்றொரு படம் ரீலிசாகிறது
இயக்குனர் ஷங்கரின் "எஸ் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம் "வெயில். ஷங்கரின்அசிஸ்டென்டும், ஆல்பம் திரைப் படத்தின் இயக்குனருமான வசந்த பாலன் தான் வெயில் படத்தை இயக்குகிறார்.
பரத் தான் ஹீரோ. பிரியங்கா, பாவனா, எஸ்.எஸ்.மியூசிக் ஸ்ரேயா ரெட்டி என படத்தில் மூன்று ஹீரோயின்கள்.
திருக்ழுக்குன்றம், மதுரை, விருதுநகர் பகுதிகளில் படபிடிப்பை முடித்த பின் இறுதி கட்ட படபிடிப்பிற்காகஇக்குழுவினர் விருதுநகர் வந்துள்ளனர்.
படத்தில் வெயிலோடு கலந்து, வெயிலோடு உறவாடி, வெயிலோடு முட்டி மோதி என முழுக்க முழுக்க வெயிலைபற்றியே ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் தெருக்களின் சந்துக்களை மையமாக வைத்தும் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. (இயக்குனரின்சொந்த ஊரும் இதுவே).
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகனும், அவரிடம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவருமான பிரகாஷ்இசையமைப்பாளராக இதில் அறிமுகமாகிறார்.
நா.முத்துக்குமார் தான் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.
வெயிலைப்பற்றி கேட்டால் நான் ஸ்டாப்பாக பேசுகிறார் இயக்குனர் வசந்தபாலன்.
விருதுநகரில் வெயிலோடு நடக்கும் ஒரு கதையை படமாக்குகிறோம். மற்ற எந்த மாவட்டங்களிலும் இல்லாதஅளவிற்கு கடுமையான வெயில் கந்தக பூமியான விருதுநகரில் மட்டுமே இருக்கும். இங்கு மட்டும் தான்வெயிலுக்காகவே வெயிலுக்கந்தம்மன் கோயில் உள்ளது.
மண்ணோடும், மக்களோடும் இணைந்த, கலந்த ஒரு கதையை திரைபடமாக்குகிறோம்.
சினிமா உலகத்திற்கு தெரியாத எவ்வளோ விஷயங்கள் விருதுநகரில் உள்ளன.
எதார்த்தமான படங்களை எடுக்க விரும்புகிறேன். படத்தை நல்ல வெயில் காலமான ஜூனில் படத்தை வெளியிடதிட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.
ரொம்ப சுடும் போலிருக்கே..


Click it and Unblock the Notifications











