மன்னர் மாதிரி வாழுறாரு நெப்போலியன்.. எனக்கு செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன்.. விதார்த் நெகிழ்ச்சி!
சென்னை: மாதவன் நடித்த மின்னலே படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் விதார்த். சினிமாவில் எப்படியாவது ஒரு சீனிலாவது நம்முடைய முகம் தெரிந்து விடாதா என பெரும் ஏக்கத்துடன் போராடிய விதார்த் இன்று ஹீரோவாக தனது விடாமுயற்சி காரணமாக வளர்ந்து நிற்கிறார்.
தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் நெப்போலியன் தனக்கு செய்த உதவியை என்றுமே மறக்க மாட்டேன் என சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் விதார்த்.
அடையாளம் தெரியாத கதாபாத்திரங்கள்: சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே வாரிசு நடிகர்களாக எளிமையான முறையில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் இயக்குனராகவும் மாறிவிடுகின்றனர். ஆனால், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கஷ்டப்பட்டு படிப்படியாகத்தான் முன்னேறி வருகின்றனர். மின்னலே, மௌனம் பேசியதே, ஸ்டுடென்ட் நம்பர் ஒன், சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, லீ, பரட்டை என்கிற அழகு சுந்தரம், குருவி, ராமன் தேடிய சீதை, திருவண்ணாமலை, லாடம் உள்ளிட்ட பல படங்களில் அடையாளமே தெரியாத ரோலில் நடிகர் வித்தார்த் நடித்துள்ளார்.

மைனா தந்த அடையாளம்: விக்ரம், விஜய்சேதுபதியை போலவே விதார்த்தும் பல தடைகளை கடந்து போராடிய நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியது, அந்த படத்தில் அமலாபாலுடன் இணைந்து நடித்து இருப்பார் விதார்த். அந்தப் படத்தை தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்திலும் விதார்த்தின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது.
நெப்போலியன் செய்த உதவி: அமெரிக்காவில் மன்னர் போல நெப்போலியன் வாழ்ந்து வருகிறார் என்றும் சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் விதார்த் கொடுத்து அவரை வீடியோ வெளியான நிலையில், தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தனது மகனுக்கு ஸ்கூல் பீஸை முழுமையாக கட்டியது அவர்தான் என்றும் பல படங்களில் நடித்தும் பெரிய சம்பளமோ சேமிப்போ இல்லாத நிலையில், தனக்கு உதவிய நெப்போலியனை என்றுமே மறக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு படத்தில் நெப்போலியன் உடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது என்றும் அவர் என்னைப் போல பல பேருக்கு உதவி உள்ளார் என்றும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











