Vidhyasagar: எங்கப்பாவை ரசிகர்கள் கொண்டாடவே இல்லை.. வித்யாசாகர் மகன் உருக்கமான பேட்டி!

சென்னை: இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையை திரையுலகமும் ரசிகர்களும் சரியாக கொண்டாடவே இல்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

விஜய்யின் பிகில் உள்ளிட்ட படங்களில் மியூசிக் மேனேஜ்மென்ட் பணிகளை செய்து வருகிறார் ஹர்ஷவர்தன்.

ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், தமன் உள்ளிட்ட அனைவரிடத்திலும் பணியாற்றி வரும் அவர் அப்பாவை போலவே இசைத்துறையில் சாதிக்கும் முயற்சியில் முழு ஈடுபாட்டை காட்டி வருகிறார்.


வித்யாசாகர்: பறவைகள் பலவிதம், பூமணம் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து இசையமைப்பாளராக உருவான வித்யாசாகர் ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெய்ஹிந்த், கர்ணா, பசும்பொன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, செங்கோட்டை, தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், திருமலை, சந்திரமுகி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Vidhyasagar son opens up Music world and fans not celebrated his father very much

வித்யாசாகர் மகன்: வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தனும் இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். இசையமைப்பாளர்களுக்கு இசைக்கோர்வை செய்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அவர், பிகில் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தை பற்றியும் சினிமாவில் தான் எப்படி வந்தேன் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

அப்பா பெயரை பயன்படுத்தவில்லை: சினிமாவில் நுழைவதற்காக தனது அப்பா பெயரை எங்கேயும் பயன்படுத்தவில்லை என்றும் தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் நானாக போயிட்டு சோ அண்ட் சோ என சொன்னது கிடையாது என்றும் என்னால் முடிந்த முயற்சியில் சினிமாவில் பணியாற்றி வருகிறேன். என்னை பற்றி தெரிந்த உடன் வித்யாசாகர் மகன் என ஏன் சொல்லவில்லை என்றே பலரும் கேட்பார்கள் எனக் கூறினார்.

அப்பாவை கொண்டாடவில்லை: எலி, திருட்டுப்பயலே 2 படத்திற்கு தமிழ் சினிமாவில் வித்யாசாகர் எந்தவொரு படத்துக்கும் இசையமைக்கவில்லை. இசை உலகமும் ரசிகர்களும் என்னுடைய அப்பாவை கொண்டாடவே இல்லை என்றும் அவருக்கு இருக்கும் இசை அறிவு இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

சந்திரமுகியின் படத்தின் பாடல்கள் எல்லாம் எந்தளவுக்கு சூப்பராக இருந்தது என்பதை சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும்போதே ரசிகர்களுக்கு புரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X