»   »  வித்யா பாலனின் விசனம்!

வித்யா பாலனின் விசனம்!

Subscribe to Oneindia Tamil

வித்யா பாலனிடம் போய் ஏன் தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுவதில்லை என்று யாராவது கேட்டால் குந்த வைத்து புலம்ப ஆரம்பித்துவிடுகிறாராம்.

இந்தித் திரையுலகின் இப்போதைய ஹாட் நாயகி வித்யா பாலன். மாடலிங் மூலம்சினிமாவுக்கு வந்தவர் வித்யா. எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக் கூடிய லட்சணமானமுகம், கெட்டப்பான உடலமைப்பு என சினிமாவுக்கேத்த தகவமைப்புடன்கூடியவர்தான் வித்யா பாலன்.

அப்படிப்பட்ட வித்யா பாலன் தசாவதாரம் படத்தில் நடிக்க கமலே கேட்டும் கூடமறுத்து விட்டார் என்பதுதான் கொஞ்ச நாளைக்கு முந்தைய கோலிவுட்டின்புலம்பலாக இருந்தது. ஆனால் வித்யாவிடம் போய் இதைக் கேட்டால் அவர் வேறுசில கதைகளைக் கூறி நீங்களே நியாயம் சொல்லுங்க என்கிறார்.

எக்கா, எக்கா, என்னாச்சுக்கா என்று வித்யாவிடம் விலாவாரியாக கேட்டோம்.அவரும் அடுக்கினார் தனது சோகக் கதையை.

நான் தமிழில் ரொம்ப காலத்திற்கு முன்பே நடித்திருக்க வேண்டியதுப்பா. ஆனால்துரதிர்ஷ்டவசமாக அது முடியாமல் போய் விட்டது. முதலில் ரன் படத்தில் என்னைநாயகியாக நடிக்க கேட்டார்கள். நானும் ஒத்துக் கொண்டேன்.

போட்டோ செஷன் கூட எடுத்து முடித்து விட்டார்கள். ஆனால் திடீரென, காரணமேசொல்லாமல் என்னைத் தூக்கி விட்டனர். பிறகு மீரா ஜாஸ்மின் அந்த கேரக்டரில்நடித்தார்.

அடுத்து மனசெல்லாம் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஒரு ஷெட்யூலைக் கூடஎடுத்து விட்டார்கள். 2வது ஷெட்யூலுக்கு நான் தயாராக இருந்தபோது என்னிடம்வந்து உங்க முகம் போட்டோஜெனிக்காக இல்லை. எனவே ஸாரி என்று சொல்லிவிட்டு என்னை நீக்கி விட்டனர். பிறகு திரிஷா அந்த ரோலில் நடித்தார்.

ஆச்சா! அடுத்து சக்ரம் என்று ஒரு மலையாளப் படம். அதில் மோகன்லாலுடன்ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். நானும் அட, சூப்பர் ஸ்டார் படமாச்சேஎன்று சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆனால் என்ன ஆச்சோ தெரியவில்லை,திடீரென மோகன்லால் படத்தை விட்டு விலகி விட்டார்.

அடடா, என்று அவருக்கா நான் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது,நானும் படத்தில் இல்லையென்று. சோகக் கதையை கொஞ்சம் நிறுத்தி சோடா குடித்துக்கொண்டு தொடர்ந்தார்.

இப்படி தென்னிந்தியப் படங்களில் நடிக்க எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் ஏனோகாரணத்தினால் நழுவிப் போய் விட்டன. இந்த நிலையில்தான் எனக்கு பரினீதாபடத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் என்னை சூப்பர் ஹிட் நாயகியாகஇந்தியில் மாற்றி விட்டது.

தொடர்ந்து லகே ரகோ முன்னாபாய் படத்தில் நடித்தேன். இப்போது கை நிறையஇந்திப் படங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் தசாவதாரம் பட வாய்ப்பு வந்தது.என்ன துரதிரஷ்டம், முன்பு எனது கால்ஷீட்கள் ஃப்ரீயாக இருந்தபோது, நடிக்கஆசையாக இருந்தபோது ஒரு படமும் செட் ஆகவில்லை.

ஆனால் நான் பிசியாக இருந்தபோது கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகரின்படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுப் போனது. உண்மையில்நான் கமலின் தீவிர ரசிகை. அவரது பல படங்களுக்கு நான் தீவிர ரசிகை.

அப்படிப்பட்ட நான் கமலுடன் ஜோடி போட முடியாமல் போய் விட்டது. எல்லாம்டைட் கால்ஷீட்டால் வந்த வினை.

இதுதான் நடந்தது என்று சுற்றிக் கொண்டிருந்த பிளாஷ்பேக்வளையத்திற்குள்ளிருந்து வெளியே வந்து நிறுத்தினார் வித்யா பாலன்.

அடடா, ரொம்ப சோகமாவுல்ல இருக்கு?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil