ஜன நாயகன் படம் இப்படித்தான் லீக் ஆனதா?.. உஷாரான விக்னேஷ் ராஜா.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் படம் லீக்கானது ஒட்டுமொத்த சினிமாத்துறைக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் மேலும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்கிற அக்கறையையும் கொடுத்துள்ளது. சமீபத்தில் 'கர' படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த விக்னேஷ் ராஜா ஜன நாயகன் படம் லீக்கானது மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், ஜன நாயகன் படத்தை போல கர படமும் லீக் ஆகிவிடக் கூடாது என்கிற அச்சத்தில் அவசர அவசரமாக அந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தோம் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Vignesh Raja says Jana Nayagan leak makes him scary and he removed Kara from Google Drive

அப்போ ஜனநாயகன் படமும் இப்படித்தான் கசிந்ததா? என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர். தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்தாலும் அதை ஹேக் செய்யும் தொழில்நுட்பமும் சேர்ந்து வளர்ந்துக் கொண்டு தான் இருப்பது காலக்கொடுமை.

500 கோடி நஷ்டம்: கடைசியாக ஒரு படத்தில் நடிக்க வாக்குக் கொடுத்துவிட்டேன் என்பதால், அந்த படத்தை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலகுகிறேன் என விஜய் சொன்ன நிலையில், ஜன நாயகன் படம் உருவானது. பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காகவே ஜன நாயகன் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி பிசினஸ் கொண்ட அந்த படத்தை லீக் செய்து விஜய்யை எந்தளவுக்கு முடக்க முடியுமோ முடக்க அவருக்கு வேண்டாதவர்கள் பார்த்த கேவலமான வேலை தான் இந்த ஜன நாயகன் லீக் என விக்னேஷ் சிவன் முதல் விக்னேஷ் ராஜா வரை பல இயக்குநர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

வலியும் பயமும் தந்துடுச்சு: ஜன நாயகன் படம் லீக்கானது ரொம்பவே பயத்தையும் மறக்க முடியாத வலியையும் தந்துள்ளது. நாங்களும் தனுஷின் 'கர' படத்தை நம்பிக்கையின் பேரில் கூகுள் டிரைவில் போட்டு வைத்துள்ளோம். ஆனால், ஜன நாயகன் படம் லீக்கான தகவல் அறிந்ததுமே கூகுள் டிரைவில் இருந்து கர படத்தை தூக்கிவிட்டோம். ஒரு மிகப்பெரிய நம்பிக்கையுடன் வைக்கும் இடத்தில் இருந்து திருட்டுப் போவது ரொம்பவே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார்.

ஜன நாயகன் படமும் இப்படித்தான் திருடப்பட்டதா?: ஜன நாயகன் திரைப்படம் எடிட் வெர்ஷனில் இருந்து திருடப்பட்ட நிலையில், எடிட்டர் பிரதீப் ராகவ் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆனால், ஜன நாயகன் லீக்குக்கும் எடிட்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எடிட்டர் சங்கம் கூறியது. இந்நிலையில், கூகுள் டிரைவில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட படத்தை ஹேக் செய்து எடுத்து லீக் செய்தார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சிஜிக்காக அனுப்பப்பட்ட நிலையில், அங்கே இருந்தும் இந்த படம் லீக் ஆனதா? என்கிற விசாரணை ஓடிக்கொண்டிருக்கிறது. ஜன நாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் மத்திய தணிக்கை சான்றிதழ் வாரியம் இழுத்தடிப்பது சரியல்ல என்றே பலரும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X