210 கோடில பிரதீப் ரங்கநாதன் படமா?.. கமல் எஸ்கேப்.. கடைசியில மூக்குத்தி அம்மன் தான் காப்பாத்தினாராம்!
சென்னை: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியானதே தனக்கு சூப்பர் ஹிட் என படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் செம ஹேப்பியாக பேட்டிக் கொடுத்துள்ளார். மேலும், ஆரம்பத்தில் இந்த படத்தின் பட்ஜெட் 210 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அவர் ஓபனாக சொல்லியிருப்பது பயங்கர ட்ரோல் மெட்டீரியல் ஆகியுள்ளது.
கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். டிராகன், டியூட் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எல்லாம் 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன.

லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனை வைத்து 210 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு கதையை எடுக்க உனக்கு தனி தில்லு வேண்டும்ப்பா என விக்னேஷ் சிவனை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.
210 கோடி பட்ஜெட்டா?: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் தான் அதிகப்படியாக 37 கோடி ரூபாய் பட்ஜெட் என அஸ்வத் மாரிமுத்து கூறியிருந்தார். இந்நிலையில், டிராகன் படத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் அதிகப்படியாக 210 கோடி பட்ஜெட்டில் உருவாக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், படத்தை தயாரிக்க யாருமே முன் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அஜித்தை போலவே எஸ்கேப்பான கமல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களில் நானும் ரவுடி தான் படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது. போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து சுமாரான படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவனை நம்பி அஜித் நடிக்காத நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் 210 கோடி பில் போட விக்னேஷ் சிவன் பிளான் போட்டாராம். ஆனால், அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கவில்லை என்று கூறியுள்ளார். சிம்புவை வைத்தே கமல் அந்த ரிஸ்க்கை எடுக்க தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூக்குத்தி அம்மன் தான் காப்பாத்தினார்: செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தான் படத்தின் பட்ஜெட்டை 100 கோடியாக குறைக்க சொன்னார் என்றும் ஆனால், மார்க்கெட் கிராஷ், ஓடிடி பிசினஸ் கிராஷ் உள்ளிட்ட காரணங்களால் அவரும் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் முடியாது என சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான் நயன்தாரா தயாரிப்பாளராக உள்ளே வந்து, எப்படி செலவு செய்து எடுக்க நினைக்கிறீங்களோ எடுங்க என சொல்லி மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு வாங்கிய சம்பளத்தை கொடுத்து இந்த படம் உருவாக உறுதுணையாக இருந்தார் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
100 கோடிக்கு வொர்த்தா?: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை உலகளவில் 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு விடுமுறை தினமான நேற்று படம் அதிகபட்சமாக இந்தியாவில் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 90 முதல் 100 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இந்நேரம் 100 கோடி வசூலை தாண்டியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், இந்த படத்தின் இறுதி வசூலே 100 கோடி வருமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











