ஜன நாயகன் படத்தை போனில் பார்த்துக் கொண்டு இருந்த நபர்.. கோபத்தில் விக்னேஷ் சிவன் செய்த செயல்

சென்னை: தமிழ் திரைத் துறையில் எங்கு திரும்பினாலும் விஜய்யின் ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது தொடர்பாக தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை முதற்கட்டமாக ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் தனது லவ் இன்சூரன்ஸ் கொம்பெனி படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றபோது மதுரை விமான நிலையத்தில் ஒருவர் செல்போனில் ஜனநாயகன் படத்தை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து கோபத்தில் அவரது போனை தட்டி விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விக்னேஷ் ஒன்று கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு நான் சென்றபோது, அங்கு ஒருவர் அவரது மொபைலில் ஜனநாயகன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு கோபம் சட்டென வந்து விட்டது. உடனே போனை தட்டி விட்டு விட்டேன். எனக்கு அந்த போனை உடைக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் நான் அதை செய்யவில்லை.

Vignesh Shivan Reacts Angrily After Spotting Jananayagan Leak on Phone Incident Sparks Debate on Piracy

மன வலி: அதைப் பார்த்தவுடன் எனக்கு சரியான வயிற்று எரிச்சல் வந்து விட்டது, கோபமும் வந்துவிட்டது, மிகவும் கஷ்டமாக இருந்தது. சினிமாவில் இருப்பவர்களுக்கு தான் அந்த வலி என்ன என்பது குறித்து தெரியும். ஒரு ஒரு பிரேமாக உருவாக்க எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிவதில்லை. எனக்கு 21 வயதிலிருந்து தெரிந்தது இந்த சினிமா மட்டும் தான். இப்படி சினிமாவை மட்டுமே நம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும், இந்த வலி என்னவென்று என விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan Reacts Angrily After Spotting Jananayagan Leak on Phone Incident Sparks Debate on Piracy

ஜன நாயகன்: விக்னேஷ் சிவனின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த படம் ஜனநாயகன். இந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போனது. மிக முக்கியமாக படத்தின் ரிலீஸ் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி மாறியது. இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் கடந்த வாரத்தில் ஜனநாயகன் முழு படமும் எச்டி தரத்தில் இணையத்தில் லீக் ஆகி பெரிய அதிர்ச்சியை மொத்த படக்குழுவினருக்கும் திரையுலகத்திற்கும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X