கடைசியில த்ரிஷாவுடன் தான் கூட்டணி.. விஜய்க்கு இனியும் முட்டுக்கொடுக்க முடியாது.. அந்தணன் பளிச்!

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்காக இனிமேல் அடுத்த 33 வருஷத்தை கொடுக்கப் போவதாக ஜன நாயகன் ஆடியோ லாஞ்சில் விஜய் அறிவித்து இருந்தார். சங்கீதா விஜய்யுடன் சேர்ந்து இனிமேல் வாழப்போவதில்லை என்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமே விஜய் உழைக்கப் போகிறார் என அவரது கட்சியினரும் ரசிகர்களும் நினைத்த நிலையில், நடுவுல இந்த த்ரிஷா வந்தா என்ன பண்ணுவீங்க என்பது போல த்ரிஷாவின் ஆட்டம் சூடுபுடிக்க விஜய் ரசிகர்களே விரக்தி அடைந்து விட்டனர் என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓபனாக பல விஷயங்களை பேசியுள்ளார்.

விஜய்யின் சம்பள உயர்வு, விஜய்யின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி ரிப்போர்ட் என ஏகப்பட்ட விஷயங்களை அந்தணன் மற்றும் பிஸ்மி அளவுக்கு அதிகமாகவே பேசியுள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக விஜய்யை சுற்றி நடைபெறும் சர்ச்சைகளை பார்த்து கடுப்பாகி இனிமேல் விஜய்க்கு முட்டுக்கொடுக்க முடியாது என்றே அந்தணன் சொல்லிவிட்டார்.

Vijay and Trisha must avoid these illegal affair controversies says Journalist Anthanan
Photo Credit:

விஜய்யின் தவெக கட்சி தொடங்கியதும் அவருக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியே கூட்டணிக்கு அழைத்தும் விஜய் செல்லவில்லை.

த்ரிஷாவுடன் கூட்டணி: விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார், தேமுதிகவுடன் கூட்டணி வைப்பார், காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்த்த பலருக்கும் அல்வா கொடுத்து விட்டு த்ரிஷாவுடன் தான் இறுதியில் அவர் கூட்டணி வைத்துள்ளார் என அவரது ரசிகர்களே கலாய்த்து ரீல்ஸ் போடும் அளவுக்கு விஜய்யின் நிலைமை ரொம்பவே பரிதாபத்திற்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே பொளந்துக் கட்டியுள்ளார்.

முட்டுக்கொடுக்க முடியாது: விஜய் நடித்த வாரிசு, பீஸ்ட் படங்கள் படுதோல்வியை சந்தித்தாலும் அந்த படங்களுக்குக் கூட அந்தணன் மற்றும் அவரது டீம் எல்லாம் வேறலெவலில் முட்டுக் கொடுத்தனர். கரூர் சம்பவத்திற்கு பிறகும் அந்தணன் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால், த்ரிஷா விவகாரத்தில் விஜய் நடந்துக்கொண்டது கொஞ்சமும் ஏற்புடையது கிடையாது என்றும் இதற்கு மேலும் விஜய்க்கு முட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

பார்த்திபனுக்கும் சமுத்திரகனிக்கும் அக்கறை: பார்த்திபன் மற்றும் சமுத்திரகனி திமுக ஆதரவாளர்களாக இருந்தாலும், விஜய்யின் மீதும் அவர்களுக்கு அதிகப்படியான அக்கறை உள்ளது. அதனால் தான் வீட்டிலேயே த்ரிஷாவை நாலு சுவத்துக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்றும் குந்தவையை வீட்டுக்குள்ளே குந்த வைங்க என்றும் பேசினர் என அந்தணன் விளக்கம் அளித்துள்ளார். பார்த்திபனின் நேரடி அட்டாக்கிற்கு பிறகு நடிகை த்ரிஷா இதுவரை வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதே நல்லது என்றும் தேர்தல் முடியும் வரை விஜய் மற்றும் த்ரிஷா கம்முன்னு இருந்தால் ஜம்முன்னு இருக்கலாம் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X