twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடியில் ஒருவன் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆப் ஸ்க்ரீன் வேற லெவல் அப்டேட்ஸ் !

    |

    சென்னை :மெட்ரோ, ஆள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஆத்மிகா போன்ற முன்னனி கதாப்பாத்திரங்கள் நடிக்கும் அதிரடி மற்றும் த்ரில்லர் திரைப்படம் தான் "கோடியில் ஒருவன்" .

    இன்று இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்கலை வித்தகரான விஜய் ஆண்டணி பட்டைய கிளப்பிய படங்களின் வரிசையில் இதுவும் முக்கியமான படம் என்பதில் சந்தேகமே இல்லை.

    பாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி!பாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி!

    படத்தின் பல ஸ்வாரஸ்ய சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

    ஆரம்பமே அதிரடி தான்

    உங்கள் முதல் திரைப்படம் ஆள். இப்ப ரிலீஸ் ஆகியிருக்கிற கோடியில் ஒருவன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள், அனுபவங்கள் என்ன? என்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் சொன்ன பதில் பின் வருமாறு இதுவரை தமிழ் சினிமாவுல அவ்ளோ ரிஸ்க்கான இடங்களில் படம் வந்தது கிடையாது. ஆள் படத்தில ரொம்ப பரபரப்பான ஏரியாவுல, அண்ணாசாலை,பாரிஸ்ன்னு ஷூட் பண்ணிருந்தோம். க்ளைமேக்ஸ் சென்னைல LIC பில்டிங் ஓட வாசல் ல, 200 பேரோட நடக்கும் அதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடக்கும். ஆள் திரைப்படத்துக்கு சிறந்த வில்லனுக்கும் சிறந்த படத்திற்குமான தமிழக அரசின் விருது கிடைச்சது. ரொம்ப விறுவிறுப்பான படம். அதே போல கோடியில் ஒருவனும் ஆக்ஷன் த்ரில்லர்ன்னு குடும்பத்தோட வந்து தியேட்டரில் பார்க்கக்கூடிய படம். இந்த லாக்டவுன்க்கு அப்பறம் தியேட்டர் ரிலீஸ் ஆகுறத நெனச்சி பாக்கவே சந்தோஷமா இருக்கு. ஏன்னா இந்தபடம் தியேட்டர் எபக்ட்ல எடுத்துட்டு, லாக்டவுன் காரணமா தியேட்டர் ரிலீஸ் பண்ண முடியாம, ரொம்ப நாள் காத்திருந்து இப்ப ரிலீஸ் ஆகிருக்கு. நிச்சயமா மிரட்டலா இருக்கும் என்றார் .

    இசைக்கு அடிமை

    இசைக்கு அடிமை

    இசை பட்டய கெளப்புது. உங்க பார்வையில இசையமைப்பாளார் எப்படி? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் பின் வருமாறு

    அல்ரெடி அவரோட பெரிய ஃபேன் நான். நிவாஸோட தெகிடி பட பாட்டெல்லாம் அவ்ளோ ரசிச்சிருக்கேன். சேதுபதி பட பாட்டு, ரீசண்ட்டா வந்த மிரா-ன்னு ஒரு சாங்.. இதெல்லாம் எனக்கு அல்டிமேட் பேவரிட். ரெண்டு பேருக்கும் வேவ்லெந்த் செட் ஆனதால ரொம்பவே எல்லாம் வந்துருக்கு. முதல்ல இந்த படத்துக்கு ம்யூசிக் குடுத்தப்பவே லிரிக்ஸோட குடுத்தார். ரொம்ப நல்லாருந்துச்சு. இத அப்படியே யூஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன். முதல்ல குடுக்கறப்பவே க்ளிக் ஆகறதுங்கிறது எதாச்சும் ஒன்னுதான் அமையும். ஆனா கோடியில் ஒருவன் ல ஆறு முழுப்பாடலும், 3 சின்ன பாடலும் இருக்கு. எல்லாமே முதல்ல அவர் குடுத்ததுமே, எனக்கும் சரி, விஜய் ஆண்டனி சாருக்குமே சரி, முதல் தடவ கேக்கும் போதே ஓக்கே பண்ணியாச்சு.அவ்ளோ சூப்பரா இருக்கு.

    மனசார செய்யணும்

    மனசார செய்யணும்

    இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூறியிருப்பதாவது, என் மனசு எனக்கு ஓக்கே சொன்னாதான் நான் குடுப்பேன். அரகுரையா, பரவால்லன்னு கூட தோணுச்சுன்னா அந்த படைப்பு வராது. எனக்கு பெஸ்ட்ன்னு தோணும். அந்த பெஸ்ட்ட குடுக்குறேன் அவ்ளோதான்.

    பாடல் இசைகளுக்கு விஜய் ஆண்டனி என்ன கரெக்ஷன் எல்லாம் சொன்னாரு?என்ற கேள்விக்கு உண்மைய சொல்லனும்ன்னா.. எந்த கரெக்ஷனுமே சொல்லல. ரெண்டு மூனு தடவ ஸ்டூடியோ வந்தப்ப, அவரோட தனி ஒப்பீனியன் சொன்னாரு, அதெல்லாம் நல்லாருந்ததால படத்துல சேர்த்துகிட்டேன். எல்லாருமே ஒரே சிங்க் ல இருக்கப்போ, எல்லாமே சரியாத்தான் இருக்கு.

    சாக்கடையில் விஜய் ஆண்டனி

    சாக்கடையில் விஜய் ஆண்டனி

    ரொம்ப டெடிகேஷனான விஜய் ஆண்டனிகிட்ட ஷூட்ல நீங்க பார்த்து மிரண்ட விஷயம் என்ன?என்ற கேள்விக்கு இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறிய பதில் . ஷூட் ஆரம்பிக்கிறப்போ கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல கூடிட்டாங்க. 55 நாள் எப்படி சமாளிக்கப்போறேன்னு பயந்தேன். ஆனா நடந்ததே வேற, எத்தன ரசிகர்கள் வந்தாலும் எல்லாருக்கும் மதிப்பும் மரியாதையும் குடுத்து, மக்கள, மனிதர்கள ரசிக்கிறவர் மதிக்கிறவர் விஜய் ஆண்டனி. யாரையும் ஹர்ட் பண்ணாம, தவிர்க்காம ரசிகர்களை கொண்டாடினாரு. அப்பறம் ஷீட் நடக்கிற அந்த தெரு முழுக்க, வீட்ல ஒருத்தன் மாதிரி ஆகிட்டாரு கோடியில் ஒருவன். சிலர் வீட்ல திடீர்ன்னு போய் விசாரிப்பாரு, சாப்பிடுவாரு, மக்களோட மக்களா இருந்தாரு. அத்தனை அன்பா இருந்தாரு. மக்களும் அவ்ளோ அன்பா " நல்லாருக்கீங்களா.. ம்ம்.. நல்லாருக்கேன்"ன்னு சொல்ற அளவு கேஷ்வலா பேசுற அளவு ஆகிட்டாங்க. அதெல்லாம் வேற லெவல்.என்றார் இயக்குனர்.

    சாக்கடையில சேசிங் சீன்

    சாக்கடையில சேசிங் சீன்

    சாக்கடையில சேசிங் சீன்ல விஜய் ஆண்டனி விழுந்துட்டாராமே?என்று கேட்டபோது இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் சொன்ன பதில் அருமை ஒரு சேசிங் சீன் -ல சாக்கடைல ஹீரோ இறங்கி ஓடனும். அப்படி ஒரு சீன். பக்கத்து ஏரியாவுல ஒரு இடம் காலியா இருக்கு. அங்க இது போல ஏற்பாடு பண்ணி செட் போட்டுக்கலாம்-ன்னு சொன்னேன். அதுக்கெல்லாம் லேட் ஆகுமே.. இதுலயே பண்ணிக்கலாம்ன்னு சொன்னாரு விஜய் ஆண்டனி. ரொம்ப தயக்கமா சொன்னேன்..சார்.. இதுல விழனுமே..அப்படி ஒரு சீன் இருக்கேன்னு சொல்றப்போ, டக்குன்னு கீழ படுத்து, அந்த அழுக்குல இருந்துகிட்டு, இப்படி இருந்தா ஓக்கேவா-னு கேட்டாரு. எல்லாரும் மெரண்டு போயிட்டோம். சாக்கடையில விழுந்து உருண்டு, எதாச்சும் ஆகுமோ, பாதிக்குமோன்னு ல்லாம் கவல படாம, அந்த சண்டைக்காட்சி நல்லா செஞ்சி குடுத்தார்.

    ஆத்மிகா நடிப்பு அற்புதம்

    ஆத்மிகா நடிப்பு அற்புதம்

    தேனி பக்கத்துல கொட்டக்குடி கிராமத்துல குரங்கனி மலை அருவியில நடந்துச்சு. மேல 100 அடிஉயரம். கீழ அதளபாதாளம். ரெண்டுக்கும் நடுவுல ஒரு தளம் மாதிரியான மலைப்பகுதி இடம். அதுல இருந்தப்போ ஹீரோயின் ஷாட் முடிச்சிட்டு நகரும் போது ஸ்லிப் ஆகி, ஒரு கால் கீழ வழுக்கிட்டு. கடைசி நிமிஷத்துல விஜய் ஆண்டனி டக்குன்னு பிடிச்சி காப்பாத்திட்டாரு. ஒரு பெரிய விபத்துலேர்ந்து தப்பிச்சோம்.

    பல பிரச்சனைகள்

    மெட்ரோ படத்துலயும் அது போல ஒரு சேசிங் சீன். , நிஜமாவே செயின் அடிச்சிட்டு போறான்னு சொல்லி, ஊர் மக்கள் கூடி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அடிக்காதீங்க.. ஷூட்டிங்..ஷூட்டிங்-ன்னு நாங்க கத்துற சத்தத்த விட, செயின் அடிச்சிட்டு ஓடுறான்னு மக்கள் அடிச்ச அடியும் சத்தமும் தான் அதிகம். இப்படி படத்துக்கு படம் தரமான சம்பவங்கள் எல்லாம் நடந்துருக்கு.முழு வீடியோவையும் காண பில்மிபீட் தமிழ் யுட்டியூப் சேனலை பார்க்கவும்.

    English summary
    Special Interview with " kodiyil oruvan " Director Ananda Krishnan and Composer Nivas K Prasanna
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X