உங்க குழந்தையை யாராவது தப்பா சொன்னா உங்களுக்கு கோவம் வருமா? வராதா?.. விஜய் ஆண்டனி ஒபன் டாக்!
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த மாதம் இறுதியில் 'ஹிட்லர்' திரைப்படம் வெளியாகிறது. இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஆனால், அந்த 2 படங்களும் கலவையான விமர்சனங்கள் காரணமாக பெரிதாக திரையரங்குகளில் ஓடவில்லை.
படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகி உள்ள ஹிட்லர் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். கெளதம் மேனன், சரண்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ள ஹிட்லர் படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு விஜய் ஆண்டனி அளித்த பேட்டியில் 'ரோமியோ' படம் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு அன்பே சிவம் தான் என்றும் இந்தியாவில் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் டு ஹீரோ: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள், வில்லன் நடிகர்கள் ஹீரோவானதை பார்த்திருக்கிறோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர்களும் ஹீரோக்களாக மாறியுள்ளனர். விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பலர் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியுடன் நடித்து வருகிறார்.
மூடநம்பிக்கை இல்லை: பிச்சைக்காரன் என்கிற டைட்டிலில் படம் எடுத்து பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய விஜய் ஆண்டனி கொலை, ரத்தம், சைத்தான், எமன் தற்போது ஹிட்லர் என வரிசையாக நெகட்டிவ் டைட்டிலையே ஏன் வைத்து படங்களை உருவாக்கி வருகிறார் என்றும் சினிமாவில் நெகட்டிவ் டைட்டிலுக்கு சென்டிமென்ட் பார்ப்பார்களே உங்களுக்கு அதுபோன்ற நம்பிக்கை ஏதுமில்லையா? என்கிற கேள்விக்கு தனக்கு எந்தவொரு மூடநம்பிக்கையும் இல்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.
ரோமியோ அன்பே சிவம் தான்: ரோமியோ படம் வெளியான சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் காரணமாக கடுப்பான விஜய் ஆண்டனி ரோமியோவை இன்னொரு அன்பே சிவம் போல ஆக்கிவிடாதீங்க என அறிக்கை வெளியிட்டார். அதையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த பேட்டியிலும் தன்னுடைய ரோமியோ படம் அன்பே சிவம் படம் போலத்தான் என்றும் அதனை ரசிகர்கள் பொறுமையாக புரிந்துக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

உங்க குழந்தையை: உங்க குழந்தை தப்பான குழந்தையாக இருந்தால் கூட சரி. ஆனால், நல்ல குழந்தையை யாராவது தப்பா சொன்னா ஒரு அப்பாவாக உங்களுக்கு கோபம் வருமா? வருதா? அதைத்தான் அப்போ நான் செஞ்சேன். ஒவ்வொரு படத்தையும் உருவாக்க நாங்கள் படும் கஷ்டம் எளிதாக வன்மத்தை கக்கி விமர்சிப்பவர்களுக்கு புரியாது என விளாசியுள்ளார் விஜய் ஆண்டனி.
கடுமையான தண்டனை கொடுக்கணும்: ஹிட்லர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விஜய் ஆண்டனி தவறானவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த நபர் தவறு செய்தாரா? இல்லையா? என்பதை தீவிர விசாரித்து விட்டு கடைசியில் தண்டனை கொடுக்கும் போது அந்த நபர் ஒருவரை எப்படி கொலை செய்தாரோ அதே போல அவரை கொலை செய்ய வேண்டும் அப்போது தான் அந்த தப்பை அடுத்தவன் செய்ய பயப்படுவான் எனக் கூறியுள்ளார். ஹிட்லர் திரைப்படம் கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் என அந்த படத்தின் இயக்குநர் தனா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











