என்ன விஜய் அதுக்குள்ளயா?: ரசிகைகள் கவலை
Recommended Video

ஹைதராபாத்: ரசிகைகளின் தலையில் இடியை இறக்கியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கானா, ஆந்திராவில் மட்டும் அல்ல தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிலும் குறிப்பாக ரசிகைகள் அதிகம்.
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் பலருக்கு பிடித்த நடிகராக உள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது,

விஜய் தேவரகொண்டா
ஹீரோவாகும் வரை திருமணம் செய்யக் கூடாது என்று இருந்தேன். சில லட்சியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய வேண்டும். அப்படி சில லட்சியங்களை அடைந்தே பிறகே திருமணம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.

முடிவு
சில லட்சியங்களை அடையவில்லை என்றால் திருமணமே செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் திருமணம் செய்துவிட்டால் பொறுப்பு அதிகமாகிவிடும். ஆனால் தற்போது சில லட்சியங்களை அடைந்துவிட்டதால் திருமணத்திற்கு தயாராகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

கவலை
விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு தயாராகியுள்ள செய்தி அறிந்து அவரின் ரசிகைகள் தான் பாவம் கவலை அடைந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார்.

டியர் காம்ரேட்
விஜய் தேவரகொண்டா நடித்த டாக்சிவாலா படம் ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியானபோதிலும் ஹிட்டானது. இதையடுத்து அவர் நடித்து வரும் டியர் காம்ரேட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











