ரஜினி, அஜித், சூர்யா, SK ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்க.. ஊரைச் சுற்றி பகை..

சென்னை: நடிகர் விஜய் ரசிகர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகள் தொடங்கி தற்போது செய்து வரும் பல தவறுகள் விஜய்க்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பேச்சுக்கள் ஏற்கனவே அரசியல் தளத்திலும் சினிமா தளத்திலும் பேச்சாக இருந்தாலும், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய பேட்டில் உடைத்துப் பேசி உள்ளார்.

நடிகர் விஜய் கடந்த காலங்களில் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவின் மேடைப் பேச்சுகளின் போது நடிகர் ரஜினி குறித்து மறைமுகமாக பேசினார் என்று பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும் ரஜினி பேசியது விஜய்க்கு எதிரானது என்று எல்லாம் பேச்சுக்கள் எழுந்தது. இப்படி இருக்கையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் மிகவும் மோசமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

Vijay Faces Fan Backlash Dhananjayan Govind Says Rajinikanth Ajith Kumar Suriya SK Fans Won t Vote TVK

இது ஒரு புறம் இருக்க நடிகர் அஜித், நடிகர் விஜய், நடிகர் சிவகார்த்திகேயன் என இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் வாக்குவாதங்கள் பலவும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்தனர். இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் விஜய் சினிமாவில் இருக்கும் போது மட்டும் இருந்திருந்தால் தற்போது இவை எல்லாம் விவாதமாக மாறி இருக்காது.

ஆனால் விஜய் அரசியலுக்கு வந்த பின்னும் விஜய் ரசிகர்களின் நடவடிக்கை மற்றும் செயலில் கொஞ்சம் கூட மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ இப்போதே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிட்டார் என்றும் விஜய் ரசிகர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் நினைத்துக் கொண்டு ஓவர் ஆட்டம் போடுவது போல இருக்கிறது என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது.

Vijay Faces Fan Backlash Dhananjayan Govind Says Rajinikanth Ajith Kumar Suriya SK Fans Won t Vote TVK

இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், " அஜித் சார் ரசிகர்கள், சூர்யா சார் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ரசிகர்கள் என இவர்கள் அனைவரும் தவெகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இப்போதே நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றால், பதவியும் பவரும் வந்துவிட்டால் என்னென்ன பேசுவார்கள்? ரஜினி சார் அரசியல் வேண்டாம் என்று முடிவெடுக்க காரணம், அவர் தனது உடல்நிலை, கொரோனா காலகட்டம், தனது ரசிகர்களின் உடல்நிலை மற்றும் அவர்களின் பொருளாதார நிலை குறித்து யோசித்தார். அதனால் தான் அவர் வரவில்லை" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X