"உங்க வாய்.. உங்க உருட்டு".. திருமண சர்ச்சைக்கு பிரியங்கா தேஷ்பாண்டே சரியான பதிலடி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினியாக இருந்த டிடி உடல்நிலை சரியில்லாததால் விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறி, ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ, பாட்டு போட்டி, டான்ஸ் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அந்த தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பகிர்ந்து அனைவரையும் பேச வைத்துள்ளார்.

பிரியங்காவிற்கு, கடந்த ஏப்ரல் வாரம் வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியான பிறகு தான், பிரியங்காவிற்கு திருமணம் நடந்த செய்தியே பலருக்கும் தெரியவந்தது. அதன் பிறகு தான் கணவர் யார்? என்று இணையத்தில் பலர் ஆராச்சியே நடத்தி விட்டனர். பிரியங்காவின் கணவர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன் என்றும். இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்தது.

priyanka deshpande vasi insta

பிரியங்கா தேஷ்பாண்டே: இவர், தமிழ் நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்களை இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். அப்போது தான். பிரியங்கா தேஷ்பாண்டிற்கும் வசியுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், எப்போதும் சர்ச்சையை பேசும் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், சிரித்துக்கொண்ட விஷ ஊசி போடுவதில் சாணக்கியம் தனம் படைத்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே என்றார். அதே போல சிண்டுமுடிவதிலும் திறமையானவர். நான் பிரியங்காவை பற்றி எதுவும் தெரியாமல் பேசவில்லை இரண்டு மூன்று முறை நான் பிரியங்காவை நேரடியாக சந்தித்து இருக்கிறேன் அதனால் தான் இந்த தகவலை சொல்லுகிறேன் என்றார்.

உங்க வாய்.. உங்க உருட்டு: இன்னும் சிலர், திருமணத்திற்கு முன்பே பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமாகி விட்டார், அதனால் தான் திருமணம் அவசர அவசரமாக யாருக்குமே சொல்லாமல் நடந்தது என்று செய்திகள் பரவியது. இதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் கணவருடன் ஜாலியாக இருந்து வந்த பிரியங்கா தற்போது, தனது இன்ஸ்டாகிராமில், Pesala na peace, pesina piece... T-shirt did the damage.. என கேப்ஷனுடன் டீ சர்டுடன் இருக்கும் போட்டோவில் வாயை மூடிய படி சிரித்துக்கொண்டு இருக்கிறார். மேலும், அவர் அணிந்து இருக்கும் டீசர்டில் "உங்க வாய்.. உங்க உருட்டு.." என்ற வாசகம் உள்ளது. சோஷியல் மீடியாவில் இவர் குறித்து பரவி வரும் வதந்திகளுக்குத்தான் பிரியங்கா இப்படி மறைமுகமாக பதில் அளித்துள்ளார் என இணைவாசிகள் கருத்துக்களை பகிர்நது வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X