அரசியல் கட்சி தொடங்கிய எஸ் ஏ சந்திரசேகர்.. மகன் விஜய்யுடன் நடக்கும் மோதல்.. பரபரப்பு பேட்டி!

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தான் ஏன் இப்போது அரசியல் கட்சி தொடங்கினேன் என்பது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்காமல் திணறிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தை தான் நடிகர் விஜய் கட்சியாக மாற்றி விட்டார் என தகவல்கள் காட்டுத் தீ போல பரவின.

Vijay father SA Chandrasekhar interview about his political entrance!

இதனை அறிந்த நடிகர் விஜய், அந்த கட்சிக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அந்த கட்சி தொடங்கப்பட்டது குறித்து ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என்றும் அறிக்கை வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேள்விகளை எழுப்பிய போது, சரியாக பதில் ஏதும் கூறாமல் மழுப்பல் பதிலாகவே கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த கட்சி தனக்காக தொடங்கப்பட்டது என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக மகனுடன் உங்களுக்கு பேச்சுவார்த்தை இல்லை என்கிறார்களே? என்கிற கேள்விக்கு கொரோனா காலத்திலும் மகனை சந்தித்ததாக கூறினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்த நிலையில், தனியாக வாங்க சொல்றேன், தனியாக வாங்க சொல்றேன் என்று மட்டுமே அலைக் கழித்தார்.

தளபதி என்கிற வார்த்தையை எஸ்.ஏ. சந்திரசேகர் பயன்படுத்துவது எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் விஜய்யை சுற்றி ஒரு மாஃபியா கும்பல் இருப்பதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசிய வார்த்தைகள் விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X