Vijay: கெட்டவார்த்தையிலயே கேட்பான்டா.. உதவியாளருக்காக கோபப்பட்ட விஜய்.. அஜித் சூர்யாவையும் இழுத்திருக்காரே

சென்னை: நடிகர் விஜய்யிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளராக இருந்த செல்வம் அதற்கு முன்னர் சுமார் 50 படங்களுக்கு மேல் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். முதலில் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விசுவாசமாக வேலை பார்த்த செல்வத்தை விஜய்க்கு உதவியாளராக பணியாற்றும் படி நியமிக்கிறார் எஸ்.ஏ. சந்திர சேகர். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்னையால் விஜய் செல்வத்தை வேலையில் இருந்த நிறுத்தியதாகவும், அதன் பின்னர் செல்வத்திற்கு விஜய் எந்த வகையிலும் உதவ வில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல், அந்த பேட்டியில் ஒரு முறை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிர்வாகி ஒருவருக்கும் விஜய்யின் உதவியாளாருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசி, கோபமாகி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிர்வாகியை வேலையில் இருந்தே தூக்கி உள்ளார் விஜய். அது குறித்து செல்வம் சமீபத்திய பேட்டியில் விரிவாக பேசியுள்ளார்.

அதாவது அந்த பேட்டியில், " கத்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து விஜய் சார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிர்வாகி செங்கையா என்பவர் விஜய் சாரின் கேரவனுக்குள் ஏறினார். ஏற்கனவே விஜய் சார் என்னிடத்தில் கேரவனுக்குள் யாரையும் அனுமதிக்காதே என்று சொல்லி இருந்ததால், நான் செங்கையாவைத் தடுத்து விஜய் சார் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். எனவே நீயும் கேரவனுக்குள் செல்லாதே என்று சொன்னேன்.

Vijay Gone Extreme Anger For Who Attacked His Assistant Selvam at Kathai Movie Shooting Spot

நான் இப்படிச் சொல்லவும் என்னையவே தடுக்கிறாயா என்று செங்கையா என்னை ஓங்கி அறைந்து விட்டார். இந்த சம்பவம் நடைபெற்று மறுநாள் காலையில் எங்கள் சங்கத்தினர் திரண்டு செங்கையாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி கேட்டனர். சிலர் செங்கையாவை அடுத்தே விட்டார்கள். இந்த பிரச்னை தொடர்பாக நான் விஜய் சாரிடம் எதுவும் சொல்லவில்லை.

கோபம்: ஆனால் மேக்-அப் அசிஸ்டண்ட் விஜய் சாரிடம் நடந்ததைச் சொல்ல, விஜய் சார் என்னைக் கூப்பிட்டு உன்னை அடித்தார்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். நீ திருப்பி அடிக்க வேண்டியது தானே என்று கேட்டார். நான் உடனே நான் அடித்தால் அது உங்களுக்குத்தான் கெட்டப் பெயர் கொண்டு வரும் எனவே நான் அடிக்கவில்லை என்று சொன்னேன்.

Vijay Gone Extreme Anger For Who Attacked His Assistant Selvam at Kathai Movie Shooting Spot

அஜித்- சூர்யா: அடுத்து செங்கையாவை கூப்பிட்டு விட்டார். உடனே செங்கையாவோ விஜய் சாரிடம் வந்து அழுது கொண்டு, செல்வம் என்னை கெட்ட வார்த்தையில் பேசினார் அதனால் தான் அடித்தேன் என்று கூறினார். இதனால் கோபப்பட்ட விஜய், கெட்ட வார்த்தையில் பேச தான் செய்வான்டா. அப்படித்தான் பேசுவான். இதுவே நீ அஜித் கேரவனிலோ, சூர்யா கேரவனிலோ ஏறி விடுவாயா? என்று கேட்டு, மன்னிப்பு கேட்கச் சொல்லி, செங்கையாவை வேலையை விட்டே நிறுத்தினார்" என்று தெரிவித்துள்ளார். தனது உதவியாளருக்காக விஜய் கோபப்பட்டது தொடர்பான சம்பவம் குறித்த தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X