விஜயின் ஆஸ்தான ஜோதிடர் சொன்ன பரிகார பூஜை.. 41 நாள் கோலமிட்டு கோமிய பூஜை.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்!

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந் தேதி தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் இளைஞர்கள் முன்வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மே 4ந் தேதி எண்ண இருக்கும் நிலையில், தமிழகத்தில் யார் ஆட்சியை பிடித்து முதலமைச்சராவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆலோசகரான மணிகண்டன் வீராசாமி அளித்திருக்கும் பேட்டியில் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறித்து பேசி உள்ளார்.

பரிகார பூஜை: அதில், பொதுவாகவே நடிகர்களுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும் அதுபோலத்தான் விஜய்க்கும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளது. பிரபல ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேல் சொல்லாமல் விஜய் எதுவுமே செய்ய மாட்டார். விஜய்க்கு அவர் மீது இருந்த நம்பிக்கை குறைத்துவிட்டதால், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை அதிகரித்து விட்டது. ஜோதிடர் சொன்னது போல அதிகாலை 3முதல் 4 மணி வரை பிரம்மமுகூர்த்ததில் வீட்டு வாசலில் 8 பெண்கள் கோலம் போடுவார்கள். அதுவும் திரிஷா வீட்டுவாசலில் கோலம் போடுவார்கள். கோலம் போட்ட பிறகு விஜய் தனது கையால் விளக்கு ஏற்றுவார், அதன் பின் கோமியத்தை குடிப்பார். இப்படி 41 நாள் ஜோதிடர் குறித்து கொடுத்த தேதியில் சிறப்பு பூஜை நடந்துள்ளது.

நடிகையின் கட்டுப்பாட்டில்: விஜய் முழுக்க முழுக்க அந்த நடிகையின் கட்டுப்பாட்டிலும், ஜோதிடரின் கட்டுப்பாட்டிலும் தான் விஜய் இருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்வதையோ அம்மா சொல்வதையோ அவர் கேட்பதே இல்லை. அதே போலத்தான் கரூரில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் நேரத்தைக்கூட ஜோதிடர் தான் குறித்துக்கொடுப்பார். அதன்படி தான் விஜய் , முதல் முறை டெல்லிக்கு விசாரணைக்கு சென்ற போது தாமதமாக சென்றார். அதற்கு காரணம் ஜோதிடர் குறித்து கொடுத்த நேரம் தான். அதே போல, கடைசி முறை விசாரணைக்கு ஆஜரான போது, விஜய்யுடன் ஆதவ் அர்ஜூனா மற்றும் ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேல் சென்று இருந்தார் என மணிகண்டன் வீராசாமி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Vijay Vijay tvk Astrologer

பிரபல ஜோதிடர்: ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்ந்தவர். ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடைவார் என்றும், சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கணித்துச் சொன்னவர் ராதன் பண்டிட். அவரை விஜய் தவெக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகவும் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X