சங்கீதா மருமகள் மட்டுமில்லை மகள்.. ஆனால், விஜய்யை விட்டுக்கொடுக்க மாட்டேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால், தனது கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அவரின் வருமானத்திற்கு தகுந்தபடியும், சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் புகழுக்கு ஏற்றபடி நிரந்தர ஜீவனாம்சம் வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணை ஏப்ரல் 20ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய த்ரோபேக் பேட்டி வைரலாகி வருகிறது. அதில், பொதுவாக அப்பாக்களுக்கு மகள் மீது தான் அதிகபாசம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், நான் விஜய் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறேன். எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் அவனது பெயரை அர்ச்சனை செய்துவிட்டுத்தான். சோபாவின் பெயருக்கு அர்ச்சனை செய்வேன். கடவுள் எங்களுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்தார். ஒரு குழந்தையை பறிகொடுத்துவிட்டோம். இதனால், ஒட்டுமொத்த என் அன்பையும் அவன் மீது நான் வைத்து இருக்கிறேன்.

மருமகள் இல்ல மகள்: அதேபோல என்னுடைய மருமகள் சங்கீதா, மருமகள் மட்டுமல்ல இந்த வீட்டின் மகளும் அவள் தான். குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். அவளது உலகமே குழந்தைகள் தான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அழைத்து வருவது, பாடம் சொல்லிக் கொடுப்பது என அனைத்தையும் செய்வது சங்கீதா தான். குழந்தைகளை மிகவும் ஒழுக்கமாக வளர்த்து இருக்கிறாள். சங்கீதா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்றார். இருவருக்கும் இடையே ஏதோ சின்ன மனகசப்பு. ஆனால், என் மகனை எந்த காரணத்திற்காகவும் நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். அவனும் அன்பானவன் பாசத்திற்குரியவன் என்றார்.
தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், அவனை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லவே இல்லை, டாக்டர், இன்ஜினியராகத்தான் ஆக்க நினைத்தேன். ஆனால், விஜய் தான் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டு சினிமாவில் நடிப்பதாக என்னிடம் கூறினார். அதன்பின் தான் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தேன். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும், செட்டில் இருந்த அனைவருமே உன்னுடைய மகன் மிகப்பெரிய நடிகனாக வருவான் என்று சொன்னார்கள். அது இன்றைக்கு விஜய் நிரூபித்து விட்டார் என எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











