SAC வெளியவே வரல.. விஜய் சொத்துக்கள் பெயர் மாற்றும் வேலை.. சங்கீதா மனுதாக்கல் செய்ய காரணமே இதுதான்!
சென்னை: விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய், திரிஷாவுடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து பேசி இருக்கும் சினிமா பிரபலம் விஜய்யின் சொத்துக்கள் அவசர அவசரமாக பெயர் மாற்றும் வேலை நடந்து வருவதாக கூறியுள்ளார்.
Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் தேனி கண்ணன், விஜய், திரிஷா கல்யாணத்திற்கு ஜோடியாக போனதும், அவர் குறித்து வரும் செய்தியால் ஷோபா மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். விஜய்யை வைத்து படம் எடுத்து, மிகப்பெரிய இழப்பை சந்தித்தவர் எஸ்.ஏ. சி. கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை கரைக்கும் மகனாகத்தான் விஜய் இருந்தார். அவரை வைத்து எடுத்த அனைத்து படங்களும் தோல்வி அடைந்தன. இதனால் கடனாளியாகி கடைசியில் விற்பதற்கு எதுவுமே இல்லாத சூழ்நிலையில் தான் விஜயகாந்த் சந்திரசேகருக்கு கை கொடுத்து காப்பாற்றினார்.

மனவேதனையில் எஸ்.ஏ.சி: அப்போதிலிருந்தே விஜய்யை நினைத்து சந்திரசேகர் சோர்ந்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகி இருங்க என சொல்லியதும் சந்திரசேகர் மனம் வெதும்பிவிட்டார். சந்திரசேகருக்கு 2023 ஆம் ஆண்டு, இதயத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போதும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவரின் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில், எப்பொழுதுமே மதிய உணவை அவர்தான் அனைவருக்கும் கொடுப்பார். ஆனால், கடந்த சில வாரங்களாக வெளியில் தலை காட்டாமல் தன்னுடைய உதவிய இயக்குனர்களை வைத்து உணவை கொடுத்து வருகிறார்.
கைமாறும் சொத்துக்கள்: இதனால், விஜய், திரிஷா இணைந்து திருமணத்தில் கலந்து கொண்ட செய்தி கூட அவரது காதுக்கு சென்றதா, இல்லையா என தெரியவில்லை. ஆனால். இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால் ஒரு தகப்பனாக மிகவும் மன வேதனையை அனுபவிப்பார். இப்போது, இந்த விஷயத்தை சங்கீதா அவசரமாக வெளியில் கொண்டு வந்ததற்கு காரணமே, விஜயின் பெயரில் இருக்கும் பல கோடி சொத்துக்கள், வேறு ஒரு பெயருக்கு மாற்றலாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம், ஜீவனாம்சம் கொடுக்கும் போது, கணவரின் பெயரில் இருக்கும் சொத்துக்களில் இருந்து தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுமாம், அதற்காகவே இப்பொழுது முக்கியமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களின் பெயர் மாற்றம் நடந்து வருவதால் தான், சங்கீதா அவசரமாக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் என அந்த பேட்டியில் சினிமா பிரபலம் தேனி கண்ணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications