விஜய் சங்கீதா திருமண வரவேற்பு.. திணறிய நேரு ஸ்டேடியம்.. ஆத்தாடி இத்தனை ஆயிரம் ரசிகர்கள் கலந்துகிட்டாங்களா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தனித்தே போட்டியிடுகிறார். இதனால் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா குறித்த விவாகரத்து விவகாரம் பொதுவெளியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவர்களின் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டதாக விஜய் ரசிகர் மன்ற செயலாளராக பணியாற்றிய ரவி ராஜா அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. விஜய் ஒரு ரசிகையாக சந்திக்க வந்த சங்கீதா அதன் பின்னர் விஜயின் குடும்பத்தாருக்கும் சங்கீதாவை பிடித்து போனதால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற திருமணம் நடைபெற்றது. சங்கீதா அடிப்படையில் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர். விஜய் மற்றும் சங்கீதாவிற்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் தற்போது நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரண்டு ஆண்டுக்கு முன்னதாகவே தொடங்கி இருந்தாலும் இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடியாமல் உள்ளது.

Vijay amp amp Sangeetha Sornalingam Wedding Was a Grand Affair 50 000 Fans Attended Reception

இந்நிலையில் சங்கீதா மற்றும் விஜய்யின் விவாகரத்து விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், விஜய் ரசிகர் மன்ற செயலாளர் ஆக இருந்த ரவி ராஜா அளித்த பேட்டியில் விஜய் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார். அதாவது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் சென்னை எழும்பூருக்கு அருகில் உள்ள ராணி மெய்யம்மாள் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல் திருமண வரவேற்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

50 ஆயிரம்: திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக மொத்தம் 60 ஆயிரம் பத்திரிகைகள் அடித்து 60,000 பிரியாணிகள் புகாரி ஹோட்டலில் ஆர்டர் செய்யப்பட்டு 50,000 ரசிகர்கள் விஜயை பார்க்க விஜய்யின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலில் இதை எஸ்.ஏ. சந்திரசேகர் என்னிடத்தில் கூறும்போது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. காரணம் நேரு ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 12 ஆயிரம் பேர் மட்டும் தான் அமர முடியும். அப்படி இருக்கையில் 50 ஆயிரம் பேரை எப்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முடியும் என்று நான் அவரிடத்தில் கேட்டேன்.

சரியான திட்டமிடல்: ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் மிகத் தெளிவாக திட்டமிட்டு காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒரு ரிசப்ஷன் இதற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் லைட் மியூசிக் அமைத்துக் கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் 12 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைத்தார். அதன் பின்னர் 11 மணியிலிருந்து 2 மணி வரை ஒரு ரிசப்ஷன் இதற்கு தேவா லைட் மியூசிக் இதிலும் 12 ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைத்தார். அதன்பின்னர் 3 மணியிலிருந்து 5 மணி வரை ஒரு ரிசப்ஷனும், 5 மணியிலிருந்து எட்டு மணி வரை ஒரு ரிசப்ஷன் என மொத்தம் திரையரங்கில் எப்படி நான்கு காட்சிகள் திரையிடுகிறார்களோ, அதேபோல் நான்கு ரிசப்ஷன் வைத்து 50 ஆயிரம் பேரை அதில் கலந்து கொள்ள வைத்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

Vijay amp amp Sangeetha Sornalingam Wedding Was a Grand Affair 50 000 Fans Attended Reception

மிகவும் கண்டிப்பு: அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக விஜய்யின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் என்ன என்றால் கூப்பன்கள் வழங்கப்பட்ட ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் கண்டிப்பான உத்தரவை எஸ் ஏ சந்திரசேகர் போட்டிருந்தார். அதாவது பச்சை கலர் கூப்பன் காலை 7 மணிக்கு தான் வர வேண்டுமென்றால் காலை 7 மணிக்கு தான் வரவேண்டும். அவர்களுக்கு மற்ற நேரங்களில் அனுமதி கிடையாது என்ற உத்தரவால் மிகவும் சிறப்பாக அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்" என்று ரவி ராஜா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X