அரவிந்த் சாமியை வெளியே அனுப்புங்க.. சட்டென சீரியஸான விஜய் சேதுபதி.. இப்படி சிரிச்சிட்டாங்களே!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அரவிந்த் சாமி பண்ண ரியாக்‌ஷனை பார்த்து மொழி படத்தில் சிரிப்பது போல பிரகாஷ் ராஜ் சிரிக்க அதன் பின்னர் நடந்தது தான் ஹைலைட் என்பது போல ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான சண்டை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்தியளவில் நடிப்பில் மிரட்டும் ஜாம்பவான்களை ஒன்றாக அழைத்து வந்து பரத்வாஜ் ரங்கநாதன் நடத்திய ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சியில் தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது.

vijay sethupathi aravind swamy prakash raj

அரவிந்த் சாமியை வெளியே நிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு அங்கே இருந்த அனைத்து நடிகர்களுமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சீரியஸாக பேசிய விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பான் இந்தியா நடிகராக மாறிய நிலையில், அவர் விடும் பீட்டரை பார்த்து அரவிந்த் சாமி கொடுத்த ரியாக்‌ஷனை பார்த்து பிரகாஷ் ராஜ் கம்முனு இருக்காமல் சிரித்து காட்டிக் கொடுத்துவிட்டார். அதை உடனடியாக நோட் செய்த விஜய் சேதுபதி அவங்கள சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்க சார்.. ரொம்ப அசிங்கமா இருக்கு என புதுப்பேட்டை தனுஷ் போல மாறிவிட்டார்.

அரவிந்த் சாமியை வெளியே நிக்க வைங்க: விஜய் சேதுபதி ஆங்கிலத்தில் செம சீரியஸாக பேச நம்ம மெய்யழகன் நடிகர் பிரகாஷ் ராஜை பார்த்து சைகையில் என்னம்மா பின்றான் பாருங்க என சொல்ல பிரகாஷ் ராஜ் சிரித்துவிட்டார். அதை பார்த்து அப்செட்டான விஜய் சேதுபதி ஸ்கூல் பையன் போல சார் please stand him out sir என அரவிந்த் சாமியை வெளியே நிக்க வைங்க என பரத்வாஜ் ரங்கநாதனிடம் கம்ப்ளைண்ட் செய்ய தமன்னாவின் காதலரான விஜய் வர்மா உள்ளிட்ட நடிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து விட்டனர். அரவிந்த் சாமி அப்படி செய்திருக்க கூடாது என்றும் செக்கச் சிவந்த வானம் டீமின் அலப்பறை செம ஃபன் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விஜய் சேதுபதி சூப்பர்: அந்த நேரத்திலும் மூத்த நடிகர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த மரியாதை மற்றும் முக்கியத்துவத்தையும் டென்ஷன் ஆகாமல் அவர் ஜாலியாக அரவிந்த் சாமியை வெளியே நிற்க வைக்க வேண்டும் என்று சொன்னதையும் குறிப்பிட்டு மக்கள் செல்வனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X