அரசன் படத்திலிருந்து விலகினாரா விஜய் சேதுபதி? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் செல்வன்
சென்னை: நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகில் நடைபெற்றது. அதேபோல் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது மட்டும் இல்லாமல், விஜய் சேதுபது படப்பிடிப்புத் தளத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களாகவே அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்று எல்லாம் தகவல்கள் வெளியானது. இப்படி வெளியான தகவலுக்கு படக்குழு தரப்பில் இருந்தும் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கப்படாததால் ரசிகர்கள் பலரும் நம்பி விட்டனர். இப்படி இருக்கையில் இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்து அதை வதந்தி என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

வதந்தி: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவரிடம் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, " அரசன் படத்தில் இருந்து நான் விலகவில்லை. நான் படத்தில் இருந்து விலகியதாக பரவுவது வதந்தி. தவறான தகவல்கள் எல்லாம் எப்படி இவ்வளவு வேகமாக பரவுகிறது என்று தெரியவில்லை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு சீக்கிரமே தொடங்கவுள்ளது. அதில் நானும் சிம்பு சாரும் இணைந்து நடிக்கவுள்ளோம். நான் விலகியதாக பரவும் தகவல் தவறானது" என்று தெரிவித்தார்.
அரசன்: விஜய் சேதுபதி இவ்வாறு தெரிவித்தது பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. மேலும் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பே விரைவில் தொடங்கவுள்ளது என்ற தகவலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அரசன் படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அரசன் படம் ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான படமான வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதை என்று கூறப்படுகிறது.
வட சென்னை: இது தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை வெற்றிமாறனும் பேசி இருந்ததால், இந்த படத்தின் கதைக்கும் வட சென்னை படத்தின் கதைக்கும் தொடர்பு உள்ளது என்று பேசி வருகிறார்கள். மேலும் சிலர் டீகோட் வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த படம் ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் பகுதியில் இருந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











