ஜூங்கா... கஞ்ச டான் நிஜமாவே பெரிய ‘டாஆஆன்ன்ன்ன்’ தானாம்!
Recommended Video

சென்னை: ஜுங்கா படத்தில் கஞ்ச டானாக வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி - இயக்குனர் கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ஜுங்கா. சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, சுரேஷ் மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
விக்ரம் வேதா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி டானாக நடித்துள்ள இத்திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் வேதாவில் சீரியஸ் டானாக நடித்திருந்த விஜய் சேதுபதி, ஜுங்காவில் கஞ்ச டானாக காமெடி செய்திருக்கிறார்.

ஜூங்கா:
இதுவரை தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, சூதுகவ்வும், நானும் ரவுடி தான், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் கேங்ஸ்டர், ரவுடி, டான் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த வரிசையில் ஜுங்கா இவரது நான்காவது டான் படம்.

வெரைட்டி காட்டும் டான்:
தனது ஒவ்வொரு படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, டான் கதாபாத்திரத்திலும் வெரைட்டி காட்டி வருகிறார். சூதுகவ்வும் படத்தில் நேர்மையான கடத்தல் பேர்வழியாக நடித்தவர், அதற்கு நேர் எதிராக விக்ரம் வேதாவில் மிரட்டல் டானாக கலக்கியிருந்தார்.

கஞ்ச டான் ஜுங்கா:
இந்த இரண்டு படங்களில் இருந்து வேறுபட்டு, நானும் ரவுடி தான் படத்தில் 'இருக்கு ஆனா இல்ல' ரேஞ்சில் ரவுடியாக நடித்திருந்தார். இப்படியாக இதுவரை நடித்த மூன்று டான் படங்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமான கஞ்ச டானாக ஜுங்காவில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

ஃபாரின் பறக்கும் டான்:
சென்னையில் பிரபல டானாக அட்ராசிட்டி செய்யும் ஜுங்கா, ஒரு முக்கிய காரணத்துக்காக பாரின் பறக்கிறார். அது என்ன காரணம், அங்கு அது நிறைவேறியதா என காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். இதில் கஞ்ச டானாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, இதிலும் மக்கள் ரசிக்கும் வகையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

எதிர்பார்ப்பு:
விஜய் சேதுபதியின் டான் படங்களின் வரிசையில் இப்படமும் வெற்றிப்படமாகும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். டிரெய்லரைப் பார்க்கையிலேயே காமெடிக்கு உத்தரவாதம் தருகிறது ஜூங்கா. அதனால் கஞ்ச டான் நிச்சயம் மக்களின் இதயங்களைக் கொள்ளையடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











