கோட் சூட் போட்டு பதவியேற்றது குத்தமா? CM விஜய் செய்ததை நான் வியந்து பார்க்கிறேன்.. பிரபலம்!
சென்னை: தமிழக முதலமைச்சராக பதவியேற்ற விஜய் குறித்து பேசிய ரங்கராஜ் பாண்டே, ஒரு வார்த்தை கூட பார்க்காமல் விஜய் உறுதிமொழி எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது அதை நான் வியந்து பார்க்கிறேன் என அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே வியப்புடன் பாராட்டியுள்ளார்.
ரங்கராஜ்பாண்டே: விஜய் பதவி ஏற்கும் போது உறுதி மொழியை ஒரு வார்த்தை கூட பார்க்காமல் படித்தார். அதை அவ்வளவு சாதாரணமாக மனப்பாடம் செய்ய முடியாது. தவறாக படித்து விட்டால் ஆளுநர் அதை திரும்பவும் படிக்க சொல்வார். அது மிகப்பெரிய சிக்கலான விஷயம். சினிமா படப்பிடிப்பு போல ரீடெட் போக முடியாது. அப்படி என்றால், அவரிடம் எவ்வளவு திடமிருந்தால், எவ்வளவு கான்ஃபிடன்ட் இருந்தால், அந்த உறுதிமொழியை ஒருவரி கூட பார்க்காமல் படித்து இருப்பார். இதை நான் முக்கியமான விஷயமாக வியந்து பார்க்கிறேன். அதையும் அவர் உணர்வு பூர்வமாக ஆண்டவன் மீது உறுதியளிக்கிறேன் என அந்த ப்ராமிசிங்கை ப்ராமிஸாக சொன்னார்.

முக்கியமான விஷயம்: இதுமட்டுமில்லாமல் கையெழுத்து போடும்போது எழுந்து நின்று கையெழுத்து கேட்டார், அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் செங்கோட்டையன் பதவியேற்கும் போது விஜய் எழுந்து நிற்கிறார். விஜயின் தலைமையில் தான் செங்கோட்டையன் அமைச்சராக இருக்கிறார். அப்படி இருந்தும் வயதின் காரணமாக அவர் பதவியேற்கும் போது எழுந்து நிற்கிறார். இவைகளைத்தான் மரபுகளை மீறிய மிகவும் பாசிட்டிவ்வான விஷயங்களாக நான் பார்க்கிறேன். அதே போல சூட் கோர்ட் அணிந்து வந்தது ஒரு குத்தம் கிடையாது. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அது நாம் மரபு சார்ந்து வந்திருக்கும் என்றார்.
அது ஒரு குத்தமா?: தொடர்ந்து பேசிய ரங்கராஜ், இலவச மின்சாரம் குறித்து சில சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் ஒரு குழப்பமும் தேவையில்லை 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு முதல் 200 இலவசம் 300 யூனிட்டிற்கு பணம் காட்டினால் போதும். ஆனால், 1200 யூட் கரண்டை பயன்படுத்திவனால் 200 யூனிட் இலவசம் கிடையாது. இப்படி நிபந்தனைகளோடு கொடுத்திருப்பது சரிதான். இதனால், விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போய்விட்டார் என்று சொல்வதற்கு நான் அந்த கட்சியில் இல்லை, நான் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை சொல்கின்ற கட்சியை சேர்ந்தவன். அவர்கள் மிகவும் நேர்மையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று ரங்கராஜ் பாண்டே யூடியூப் சேனலுக்கு அழைத்திருக்கும் பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications