Baakiyalakshmi: கைவிட்டு போகுமா பாக்யாவின் மெஸ்.. சுதாகரின் சதி.. பாக்கியலட்சுமி அடுத்த வார அப்டேட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்தமான தொடராக இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில், சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல ரேஷ்மா, ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இனியாவிற்கு நிதீஷ் என்பவருடன் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்காக பாக்யலட்சுமி நடத்தி வந்த ரெஸ்டாரண்ட் வேண்டுமென, இனியாவின் மாமனார் சுதாகர் கேட்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இனியா வருத்தப்படுகிறாள். இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்க, இனியாவிற்கு தன்னுடைய கணவரின் குடும்பம் மோசமான குடும்பம் என்பது தெரிய வருகிறது. அதாவது, கணவன் நிதீஷ், போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிந்து துடித்து போகிறாள் இனியா. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல், அப்பா கோபியிடம், போதை பழக்கம் கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்து வீட்டீர்களே என கதறி அழகிறாள்.
பாக்யலட்சுமி: இதைத்தொடர்ந்து, கடந்த வாரம், நிதீசை போலீசார் கைது செய்து அழைத்து செல்வதை பார்த்த பாக்கியலட்சுமி ஏன், என் மருகனை கைது செய்கிறீர்கள் என்று கேட்க, இவன் போதை பொருள் பழக்கம் கொண்டவன், இப்போது தான் சிக்கினான் என்கின்றனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாக்யலட்சுமி, இனியாவிடம் விஷயத்தை சொல்கிறாள். அப்போது, இனியா, எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியும் அம்மா. அவங்க என்னை கல்யாணம் செய்து கொண்டதே உங்க ரெஸ்டாரண்டிற்காகத்தான், அந்த வீட்டில் இருக்கும் யாருமே நல்லவர்கள் இல்லை என்று சொல்லி அழுகிறாள். இதனால், கோவத்தின் உச்சத்திற்கு போன, பாக்யா ரெஸ்டாரண்டை விட்டு கொடுத்தது போல, உன் வாழ்க்கையை விட்டு கொடுக்க மாட்டேன் என்று, நேராக சுதாகர் வீட்டிற்கு சென்று, இதற்கு மேல் இந்த வீட்டில் என் மகள் வாழ மாட்டாள் என்று சொல்லிவிட்டு இனியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.

நிதீஷ் செய்த வேலை: இனியா பிரிந்து சென்றதால், ஆத்திரப்பட்ட நிதீஷ் பாக்கியலட்சுமி மெஸ்சுக்குக வந்து வேண்டுமென்றே தகராறு செய்து இனியாவிடமும் பாக்கியலட்சுமியிடமும் வம்புக்கு இழுக்கிறாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவன், பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக பேசி நித்தீஷை அடித்து அங்கிருந்து துரத்துகிறான். இதை கேள்விப்பட்ட நிதீஷின் அப்பா, என் மகனே ஆளை வெச்சி அடிச்சி அனுப்புரியா, நீ எப்படி மெஸ் வெச்சி இருக்கேணு பார்க்கிறேன் என்று சொல்லி ஒரு திட்டத்தை போடுகிறான்.
சுதாகர் போட்ட திட்டம்: இதையடுத்து இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம், சுதாகர் ஒரு அடி ஆளை ஏற்பாடு செய்து பாக்யலட்சுமியிடம் கல்யாண ஆர்டர் என்று சொல்லி 50 ஆயிரத்தை கொடுக்க சொல்கிறான். பின், நான் கொடுத்தது 5 லட்சம் ரூபாய், ஆனால், இந்த பெண் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக பொய் சொல்கிறாள் என போலீசில் புகார் கொடுக்க சொல்கிறான். சுதாகர் சொன்னது போலவே அந்த அடியாளும் செய்கிறான், போலீஸ் வந்து பாக்யாவிடம் விசாரிக்கின்றனர். அப்போது, இவர் கொடுத்தது வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் தான். ஆனால், ஐந்து லட்சம் என பொய் சொல்கிறார் என்று சொல்ல, அந்த ரௌடி இந்த அம்மா தான் பணத்தை வாங்கிக் கொண்டு பொய் சொல்கிறார்கள் என்கிறான். இதைத்தொடர்ந்து, இனியா எந்த மண்டபத்தில், எப்போது கல்யாணம் என்று கேட்க, அந்த ரௌடி வாய்க்கு வந்ததை சொல்ல, அது பொய் என்பது தெரிந்து போலீசார் அந்த ரௌடி கைது செய்கின்றனர். அதன் பின் இந்த வேலையை செய்தது சுதாகர் தான் என்பது பாக்யாவிற்கு தெரியவருகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications