என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் புகழ். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்ற புகழ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை பலர் அவாய்ட் பண்றாங்க என்று கண்கலங்கி பேசி உள்ளார்.
விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு சில பேரின் பெயரும் முகமும் நம் நினைவிற்கு முதலில் வரும். அப்படிப்பட்ட முதலில் நினைவிற்கு வருபவர் தான் நடிகர் புகழ். இவரை விஜய் டிவி புகழ் என்றே நாம் அடையாளம் காண்பதுண்டு. அந்த அளவிற்கு விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டார்.

சிரிப்புடா என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த புகழ், பின்னர் வடிவேலு பாலாஜி பரிந்துரையின் பேரில் கலக்க போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த போது டைமிங்கில் காமெடி செய்து ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.
விஜய் டிவி புகழ்: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகளவில் ரசிகர்களை ஈர்த்தார். மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு பலவிதமான கெட்டப்புகளை போட்டு வயிறு வலிக்க சிரிக்க வைப்பது புகழின் தனி ஸ்டைல் ஆகும். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியார்களாக வரும் இளம் பெண் போட்டியாளர்களை வம்புக்கு இழுப்பது, சில்மிஷம் செய்து, ரகளை செய்து பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில், நடிகை ரம்யா பாண்டியன், ரித்திகா, ஷெரின், சுனிதா, பவித்ரா லட்சுமி, சிருஷ்டி டாங்கே, தர்ஷா குப்தா என எந்த போட்டியாளரையும் இவர் விட்டுவைத்தது இல்லை.
அடுத்த படத்தில்: இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வந்த இவர், வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். சிக்ஸர், தாதா 87, கைதி, காக்டெய்ல், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வீட்டுல விசேஷம், யானை, கருங்காப்பியம், வலிமை, போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவிலும் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
கண்கலங்கிய புகழ்: இந்நிலையில், விஜய் டிவி புகழ் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என் கூட ஹீரோயினா நடிக்கிறீங்களானு கேட்டா, வேண்டானு ஒரு மாதிரி பேசுறாங்க, இன்ஸ்டாகிராம்ல போய் நானே என் கூட ஹீரோயினா நடிங்க கேட்டு மெசேஜ் பண்ணாக்கூட, பார்த்துட்டு ரிப்ளை கூட பண்ணமாட்றாங்க, அது ஏனுதான் தெரியல. அந்த மாதிரி நேரத்தில் நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டு யாராவது நிச்சயம் வருவாங்கனு நினைப்பேன். என் கூட நடிக்க விருப்பம் இல்லை என்றாலும், அட்லீஸ்ட் கதை என்னனு கேட்கலாம். ஆனால், அதுக்கூட கேட்க மாட்டாங்க என்று அந்த பேட்டியில் புகழ் கண்கலங்கி பேசி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த பேன்ஸ் இதுக்கு எல்லாம் கவலைப்படாதீங்க என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











