தல, தளபதியுடன் இணைந்து நடிக்க ஆசை…ஷிவாங்கி சிறப்பு பேட்டி !
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் அறிமுகமாகி பலரையும் ஈர்த்தவர் ஷிவாங்கி.
பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக தொடங்கினார் ஷிவாங்கி.
க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் ஷிவாங்கி பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ரசிக்கும் படி பதில்களை கூறியுள்ளார்.

8 முறை pair
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் உங்களுக்கு க்ளோஸ் டு ஹார்ட் என்ற கேள்விக்கு, அஸ்வின் தான் என பதில் கூறியுள்ளார் ஷிவாங்கி. அஸ்வின் உடன் 8 முறை pair ஆக இதுவரை இணைந்துள்ளேன் மற்ற குக்குகளுடன் ஜாலியாக இருப்பேன், இருந்தாலும் அஸ்வின் தான் க்ளோஸ் டு ஹார்ட் என கூறியுள்ளார்.

புகழ் அண்ணா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த டாப் மூவர் யார்யாரென்ற கேள்விக்கு, முதலாவதாக புகழ், இரண்டாவதாக அஸ்வின், மூன்றாவதாக பாலா என பதிலளித்துள்ளார். மூவரின் கஷ்டங்கள் குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார் ஷிவாங்கி.
பிடித்த கதாபாத்திரம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர், என்னை குழந்தையாக பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவாக பார்க்கிறார்கள் எனவும், சந்தோஷ் சுப்ரமணியம் ஹாசினி (ஜெனிலியா) தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் எனவும் பேட்டியளித்துள்ளார் ஷிவாங்கி.

சிவாவுக்கு ஜோடி
யார் யாருடன் இணைந்து நடிக்க ஆசை என்ற கேள்விக்கு தளபதி விஜய், தல அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் தாஸ் ஆகியோருடன் எனவும் அஸ்வின் படம் நடித்தால் அஷ்வினுடனும் சேர்ந்து நடிக்க ஆசை எனவும் இந்த பேட்டியில் கூறியுள்ளார் ஷிவாங்கி.


Click it and Unblock the Notifications











