நிறைய குழந்தை பெத்துக்கணும்.. அன்புக்காக ஏங்குறேன்.. கண் கலங்கி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் பிரபலமான பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்தும், தனது ஆசை குறித்து பேட்டியில் கண்கலங்கி பேசி உள்ளர்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு விஜய் டிவி நடத்தும் மேடை நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், சமையல் வீடியோக்கள், வெளிநாடு சென்ற வீடியோக்கள் உள்ளிட்ட பல வீடியோக்களை தொடர்ந்து அப்லோட் செய்து வருகிறார்.

பிரியாங்கா தேஷ்பாண்டே: பிக் பாஸ் சீசன் 3ல் கெஸ்ட்டாக உள்ளே சென்று வந்த பிரியங்கா 5வது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். விஜய் டிவியில் இருந்து இதற்கு மேல் என்னை துரத்தி அடித்தாலும் பரவாயில்லை. இங்கே நான் நானாக இருக்கப் போகிறேன் என கடைசி வரை அலப்பறையை கிளப்பிய பிரியங்கா கடைசியில் ரன்னர் அப் ஆனார்.
அன்புக்காக ஏங்குறேன்: இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தன் தம்பிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது அவள் தான் என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறாள். அவள் தான் எல்லாம், அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன், அந்தை என்ற உறவைத்தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன். அன்புதான் எல்லாம், அன்புக்காக நான் ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு அன்பு கொடுத்தால் போதும், அவர்களுக்கு நான் இரண்டு மடங்கு அன்பை திருப்பி கொடுப்பேன்.
அம்மா தான் எல்லாம்: என் அம்மா தான் என் நெருங்கிய தோழி மற்றும் எதிரியும் அவள் தான். அம்மாவை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும். என் வாழ்க்கையில் நான் தவறு செய்துவிட்டு நின்ற போது எனக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் எதிர்ந்து நின்றார். எனக்காக எத்தனையோ செய்த அம்மா, தலைகுனியும்படி எந்த செயலையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றார்.
வேலையை நேசிக்கிறேன்: நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன், ஏன் என்றால், என்னை ஏமாற்றாதது என் தொழில் மட்டும் தான். அதன் மூலமாக நிறைய மக்களின் அன்பு கிடைத்து இருக்கிறது. இதனால், மக்களுக்காக நான் எதையாவது செய்ய வேண்டும் என்பதால், நான் மேடை ஏறி மைக்கை பிடித்துவிட்டால், என்னுடைய அனைத்து பிரச்சனையும் மறந்துவிடுவேன் என்றார்.
நிறைய குழந்தை பெத்துக்கணும்: அப்போது தொகுப்பாளினி அர்ச்சனா, நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் நிச்சயம் வருவார். நீ நிறைய குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்ல, பிரியங்கா தேஷ்பாண்டே அழுகையை அடக்க முடியாமல் கண் கலங்கி அழுதார். இதைப்பார்த்த பிரியங்காவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











