சந்திப்போமா?
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பு பிளஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் மகன் விஜய் கெளரவவேடத்தில் வருகிறார்.
திருமலை, கில்லி, மதுர என தொடர்ந்து பட்டையைக் கிளப்பி வரும் விஜய் அடுத்து திருப்பாச்சி படத்தில்த்ரிஷாவுடன் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு குழந்தைகளைக் கவரும் வகையில் குழந்தைகள்சப்ஜெக்ட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
அத்தோடு தனது தந்தை தயாரிக்கவுள்ள புதிய படமான சுக்ரனில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்கவும் அவர்ஒப்புக் கொண்டுள்ளார். திருப்பாச்சியில் பிஸியாக இருந்தவரிடம், திருமலை, கில்லி ரேஞ்சுக்கு மதுர படம்இல்லையே என்றபோது அவரும் அதை ஒத்துக் கொண்டார்.
உண்மைதான். திருமலை ஹிட். கில்லி சூப்பர் ஹிட். இந்த இரண்டு படங்கள் மாதிரி மதுர அமையவில்லை.ஆனாலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் நல்ல வசூல் பார்த்துவிட்டார்கள். அந்த வகையில் பார்த்தால் மதுர திருப்தியான படம்தான்.
எப்போதும் ஏன் ஆக்ஷன் படங்களிலேயே நடிக்கிறீர்கள்; கேரக்டர் ரோல்கள் பண்ணும் ஆசை இல்லையா என்றுஎன்னிடம் கேட்கிறார்கள். முதலில் என்னை நம்பி வரும் தயாரிப்பாளர்கள் நாலு காசு சம்பாதிக்க வேண்டும்.அடுத்து என் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் சந்தோஷமாகப் போக வேண்டும்.
மேலும் இப்போதைய டிரெண்ட் ஆக்ஷன் படங்கள்தான். என்னிடம் கதை சொல்ல வருகிற இயக்குநர்கள் எல்லாம்அத்தகைய கதைகளைத்தான் சொல்கிறார்கள். இப்படியிருக்கும்போது நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
கெட்அப் சேஞ்ச், வித்தியாசமான மேக்கப் என நடிக்க எனக்கும் ஆசைதான். ஆனால் அவற்றை இப்போது செய்யமாட்டேன். அப்படியே செய்தாலும் இன்னொருத்தர் காசில் அந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டேன். அது நிச்சயம் எனதுசொந்தப் படமாக இருக்கும் என்று கூறினார்.
சுக்ரன் படத்தில் ஓரிரு சீன்களில் மட்டுமே விஜய் வருகிறாராம். ஆனால் அந்த ஓரிரு சீன்கள்தான் படத்தின் முக்கியதிருப்பமாக அமையுமாம்.
அப்படிப் போடேய்!


Click it and Unblock the Notifications











