twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்ரன் தான் பெஸ்ட் - விஜய் சிம்ரனுடன் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு சரியான ஜோடி சிம்ரன் தான் என்று விஜய்கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் யாருக்கு யார் பொருத்தம் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் அடைவது இன்று நேற்றுநடப்பதல்ல, தமிழ் சினிமா தோன்றிய காலம் முதலே இந்த வழக்கம் இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்றைய சிம்பு வரை எந்த ஹீரோவுக்கு, யார் பொருத்தம் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுப்பார்த்துத் தான் வருகிறார்கள். சமீப காலமாக பல புதிய நடிகர்கள் புற்றீசல் போல தோன்றி வருகிறார்கள். அதே அளவுக்குநடிகைகளும் ஏராளம் தான். இன்றைய நடிகர்களுக்கு எந்த நடிகை சரியான ஜோடி என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கூட சீரீயஸாக நடந்துவருகிறது. இன்றைய தலைறை நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய்க்கு யார் சரியான ஜோடி என்ற சுவாரஸ்யமானபோட்டி இன்னும் சூடாக அலசப்பட்டு வருகிறது. முதலில் சங்கவி, பின்னர் சிம்ரன், இப்போது திரிஷா, ஜோதிகா, அசின் என பல நடிகைகள் விஜய்யுடன் நடித்திருந்தாலும்,விஜய்-சிம்ரன் ஜோடி தான் முன்னணியில் உள்ளது. சிம்ரனுடன் விஜய் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். விஜய்,சிம்ரன் தான் கன கச்சிதமான ஜோடி என்று விஜய் ரசிகர்களிடையேயும் கருத்து உள்ளது. இது குறித்து விஜய்யிடம் கேட்டால், இதை நானும் ஒப்புக் கொள்கிறேன். என்னுடன் நடித்த நடிகைகளிலேயே அதிக திறமைவாய்ந்தவர் சிம்ரன் தான். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் ஹிட் ஆனது ஒரு பக்கம் இருந்தாலும், இருவரும் சேர்ந்துநடித்தபோது பல விஷயங்களில் இருவரும் கடுமையான போட்டியில் இருந்துள்ளோம். நடனமாகட்டும், நடிப்பாகட்டும் இருவருக்குமே கடும் போட்டி இருக்கும். அது ஒரு சுவாரஸ்யமான போட்டி. எனதுமனைவிக்கும் சிம்ரனையை ரொம்பப் பிடிக்கும். உங்களுடன் நடித்த நடிகைகளிலேயே சிம்ரன் தான் உங்களுக்கு சரியான ஜோடிஎன்று அவர் இன்றும் கூட கூறி வருகிறார். சிம்ரன் கல்யாணமாகி சென்று விட்டபோதிலும் கூட, மீண்டும் நடிக்க வந்தால், அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம்நடிப்பேன், எனது மனைவியும் அப்படித் தான் நினைக்கிறார் என்கிறார் விஜய். சிம்ரனுக்குப் பிறகு விஜய்-திரிஷா ஜோடிக்குத் தான் ரசிகர்களின் ஓட்டு. லேட்டஸ்ட் வரவுகளில் அசின், விஜய்க்கு ரொம்பப்பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஏக குரலில் கூறுகிறார்கள்.சிம்ரன் இருந்தும் குதூகலப்படுத்தினார், கல்யாணமாகிப் போன பிறகும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். அது தான் தமிழ்சினிமா ரசிகர்களின் மனோபாவம், பிடிச்சுப் போச்சுன்னா விட மாட்டாங்க!

    By Staff
    |
    சிம்ரனுடன் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு சரியான ஜோடி சிம்ரன் தான் என்று விஜய்கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் யாருக்கு யார் பொருத்தம் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் அடைவது இன்று நேற்றுநடப்பதல்ல, தமிழ் சினிமா தோன்றிய காலம் முதலே இந்த வழக்கம் இருந்து வருகிறது.

    தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்றைய சிம்பு வரை எந்த ஹீரோவுக்கு, யார் பொருத்தம் என்று ரசிகர்கள் ஒப்பிட்டுப்பார்த்துத் தான் வருகிறார்கள். சமீப காலமாக பல புதிய நடிகர்கள் புற்றீசல் போல தோன்றி வருகிறார்கள். அதே அளவுக்குநடிகைகளும் ஏராளம் தான்.

    இன்றைய நடிகர்களுக்கு எந்த நடிகை சரியான ஜோடி என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கூட சீரீயஸாக நடந்துவருகிறது. இன்றைய தலைறை நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய்க்கு யார் சரியான ஜோடி என்ற சுவாரஸ்யமானபோட்டி இன்னும் சூடாக அலசப்பட்டு வருகிறது.

    முதலில் சங்கவி, பின்னர் சிம்ரன், இப்போது திரிஷா, ஜோதிகா, அசின் என பல நடிகைகள் விஜய்யுடன் நடித்திருந்தாலும்,விஜய்-சிம்ரன் ஜோடி தான் முன்னணியில் உள்ளது. சிம்ரனுடன் விஜய் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். விஜய்,சிம்ரன் தான் கன கச்சிதமான ஜோடி என்று விஜய் ரசிகர்களிடையேயும் கருத்து உள்ளது.

    இது குறித்து விஜய்யிடம் கேட்டால், இதை நானும் ஒப்புக் கொள்கிறேன். என்னுடன் நடித்த நடிகைகளிலேயே அதிக திறமைவாய்ந்தவர் சிம்ரன் தான். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் ஹிட் ஆனது ஒரு பக்கம் இருந்தாலும், இருவரும் சேர்ந்துநடித்தபோது பல விஷயங்களில் இருவரும் கடுமையான போட்டியில் இருந்துள்ளோம்.

    நடனமாகட்டும், நடிப்பாகட்டும் இருவருக்குமே கடும் போட்டி இருக்கும். அது ஒரு சுவாரஸ்யமான போட்டி. எனதுமனைவிக்கும் சிம்ரனையை ரொம்பப் பிடிக்கும். உங்களுடன் நடித்த நடிகைகளிலேயே சிம்ரன் தான் உங்களுக்கு சரியான ஜோடிஎன்று அவர் இன்றும் கூட கூறி வருகிறார்.

    சிம்ரன் கல்யாணமாகி சென்று விட்டபோதிலும் கூட, மீண்டும் நடிக்க வந்தால், அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம்நடிப்பேன், எனது மனைவியும் அப்படித் தான் நினைக்கிறார் என்கிறார் விஜய்.

    சிம்ரனுக்குப் பிறகு விஜய்-திரிஷா ஜோடிக்குத் தான் ரசிகர்களின் ஓட்டு. லேட்டஸ்ட் வரவுகளில் அசின், விஜய்க்கு ரொம்பப்பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஏக குரலில் கூறுகிறார்கள்.

    சிம்ரன் இருந்தும் குதூகலப்படுத்தினார், கல்யாணமாகிப் போன பிறகும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். அது தான் தமிழ்சினிமா ரசிகர்களின் மனோபாவம், பிடிச்சுப் போச்சுன்னா விட மாட்டாங்க!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X