தமிழ் புத்தாண்டுக்கு விஜய் பேட்டி.. அடேங்கப்பா அந்த சேனலில் ஒளிபரப்பாகப் போகுதா?.. சன் டிவி?
சென்னை: நடிகர் விஜய் மீடியாக்களை சந்திப்பது கிடையாது என்றும் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவது கிடையாது என்றும் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சி ஒன்றில் விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண்டிப்பாக அன்றைய தினம் டிஆர்பி ரேட்டிங்கை விஜய் எகிற விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு போட்டியாக சன் டிவி அந்த நேரத்தில் என்ன செய்யப் போகுதோ? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
விஜய்யை தேடி ஓடும் மீடியாக்கள்: தவெக தலைவராக விஜய் மாறியுள்ள நிலையில், அவர் மீடியாக்களுக்கு பேட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து தவிர்த்து வரும் நிலையில், பல மீடியாக்கள் விஜய்யின் வீட்டு வாசலில் அவரது கேட் எப்போது திறக்கும் என்பதில் தொடங்கி அவர் எங்கே பிரச்சாரத்துக்குச் சென்றாலும், முழு கவரேஜையும் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தையும் அனைத்து மீடியா சேனல்களும் கவர் செய்து மக்களிடம் தொடர்ந்து விஜய்யை கொண்டு சேர்த்து வருகின்றன.
தமிழ் புத்தாண்டுக்கு மக்கள் நாயகன்: ஜன நாயகன் விஜய் வரும் ஏப்ரல் 14ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் நாயகன் எனும் டைட்டிலில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை பேட்டி தரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டி மூலம் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் அளிப்பார் என்றும் புதிய வாக்காளர்களை கவர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவி செக் வைக்குமா?: விஜய்யின் இந்த அரசியல் பேட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக சன் டிவி அதற்கு போட்டியாக ஒரு பெரிய படத்தை அந்த நேரத்தில் ஒளிபரப்புவார்கள் என்றும் அல்லது ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் படம் தொடர்பான நிகழ்ச்சி என பெரிய சம்பவத்தை செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், விஜய்யின் பிரத்யேக பேட்டி ஒளிபரப்பானால், அதுதான் டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











