ராதிகாகிட்ட தொடர்ந்து மன்னிப்பு கேட்ட விஜி சந்திரசேகர்... எதுக்குன்னு பாருங்க
சென்னை : ராதிகா, சரவணன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது மருத படம்.
Recommended Video

செய்முறை குறித்த கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடித்துள்ளார்.

மருத படம்
நடிகை ராதிகா, சரவணன், ஜிஆர்எஸ், விஜி சந்திரசேகர், மற்றும் அவரது மகள் லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மருத. கிராமத்தில் வழங்கப்படும் செய்முறை என்ற நடைமுறையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஜிஆர்எஸ் இயக்கம்
பிக் வே பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, படத்தின் நாயகன் ஜிஆர்எஸ் இயக்கியுள்ளார். இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. ராதிகா மற்றும் சரவணன் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். சரவணனின் மனைவியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை விஜி சந்திரசேகர்.

மிரட்டலான விஜி நடிப்பு
படத்தில் ஒரு சேசிங் காட்சியில் இவர் காட்டியுள்ள மிரட்டலான உடல்மொழி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகரும் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் கிராமத்து கெட்டப்பில் இவர் நடித்துள்ளார். அழகாக காணப்படுகிறார்.

ராதிகாவிடம் மன்னிப்பு
இந்நிலையில் பில்மிபீட் நேயர்களுக்காக இவர்கள் இருவரும் அளித்துள்ள பேட்டியில் படத்தின் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக ராதிகாவிற்கு எதிரான பல காட்சிகளில் நடித்ததாகவும் அதையடுத்து தான் அவரிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டதாகவும் விஜி குறிப்பிட்டுள்ளார். படத்தில் ராதிகாவை பார்த்து இவர் துப்புவதாக காட்சிகள் காணப்படுகின்றன.

சிறப்பான கெமிஸ்ட்ரி
படத்தில் ராதிகா மிகவும் மென்மையான கேரக்டரில் நடித்துள்ள நிலையில், விஜி மிகவும் கடுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தங்கள் இருவருக்கிடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் விஜி தெரிவித்துள்ளார்.

பின்னணியில் கஷ்டம்
மேலும் தான் நடிக்கும்போது பட்ட கஷ்டங்களைவிட பின்னணியில் மிகவும் கஷ்டப்பட்டதாக விஜி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தனக்கு கதை சொல்ல வந்த இயக்குநர் தன்னுடைய மகளை நாயகியாக புக் செய்ததாகவும் விஜி தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசை
படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், லவ்லின் மற்றும் ஜிஆர்எஸ் இடையிலான டூயட் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இளையராஜா இசையில் நடித்துள்ளது தனக்கு மிகவும் சிறப்பானது என்று லவ்லின் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலின் மூலம் தான் முதல்முறையாக டூயட் பாடலில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











