twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி!

    |

    சென்னை: காதல் படத்தில் அறிமுகமான குணசித்ர நடிகர் முத்துராமன், வழக்கு எண் 18/9 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தனது வில்லத்தனத்தை காட்டி இருப்பார்.

    தேசிய விருதுகளை குவித்த அந்த படத்திற்காக பல விருது மேடைகளில் சிறந்த வில்லன் நடிகர் விருதை முத்துராமன் பெற்றுள்ளார்.

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், இவரது நடிப்பை பார்த்து, போன் செய்து பாராட்டி உள்ளார்.

    Villain Actor Muthuraman special interview!

    காதல், வழக்கு எண் 18/9, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள முத்துராமன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் வி கனெக்ட் நிகழ்ச்சியில் சிறப்பான பேட்டியை கொடுத்துள்ளார்.

    கிட்டத்தட்ட இயக்குநர் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி உள்ளிட்டோருடன் நட்பாக இருந்த இவர், லெதர் டெக்னாலஜி படித்து விட்டு, லெதர் சம்பந்தப்பட்ட தொழிலை செய்து வந்துள்ளார்.

    "நான் வந்துட்டேன்னு சொல்லு".. ஒரு வருஷத்துக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளம் வந்த நடிகை ரம்யா!

    27 வருடங்களுக்கும் மேல் பிரபல இயக்குநர்களுடன் நண்பராக இருந்து வந்தபோதும், நடிக்க வேண்டும் என்று தான் நினைத்தது இல்லை என்றும், காதல் படத்தில், ரெஜிஸ்டர் அலுவலகர் கதாபாத்திரத்திற்கு ஆள் கிடைக்கவில்லை என்பதற்காக தன்னை பாலாஜி சக்திவேல் நடிக்க வைத்ததாகவும், பின்னர், அவர் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் வில்லனாகவே ஆக்கி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

    பொதுவாக தான் ஒரு ஜாலியான ஆள் என்றும், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவன், ஆனால், சினிமாவில் என்னை வில்லனாக மாற்றிய பெருமை எனது நண்பன் பாலாஜி சக்திவேலுக்கே சேரும் என்றும் கலகலப்பாக இவர் பேசும் வீடியோவை கண்டு மகிழுங்கள்!

    English summary
    Vazhakku Enn 18/9, Kadhal, Pichchaikaran actor Muthuraman special lockdown interview telecasted in Tamil Filmibeat youtube channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X