பீரில் ஸ்லோ பாய்சன்.. அண்ணன் செய்த துரோகம்.. முடக்கிய பக்கவாதம்.. பொன்னம்பலம் கண்ணீர்!

சென்னை: தமிழ் சினிமாவில் சண்டை கலைஞராக தனது கேரியரை தொடங்கி பொன்னம்பலம். 'கலியுகம்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா போன்ற படங்களில் நடித்தார். பொன்னம்பலத்திற்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது நாட்டாமை தான் இந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம், மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாத நிலையில், உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு சரத்குமார், தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் செய்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த போதும் எழுத்து நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார் பொன்னம்பலம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னம்பலம் வீல் சேரில் அமர்ந்தபடி நடனமாடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை தொடர்ந்து பொன்னம்பலம் Galatta voice youtube சேனல் பேட்டி அளித்துள்ளார்.

Ponnambalam health interview

பொன்னம்பலம்; அதில் நான் வீல் சேரில் இருப்பதை பார்த்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள். சிலர், பரிதாபப்படுகிறார்கள் சிலர் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவறாக எழுதுகிறார்கள். என்னுடைய உடல்நிலை இப்படி மோசமானதற்கு காரணம் என்னுடைய அண்ணன் தான். நான் சினிமாவில் அடுத்த படத்தில் நடித்து பிரபலமானதில் அவருக்கு விருப்பமில்லை. இதனால் அவருக்கு என் மீது கால் புணர்ச்சி, வெறுப்பு, பொறாமை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு ஜோசியர் சொன்னதைக் கேட்டு என் வீட்டு வாசலில் பில்லி, சூனியம் வைப்பதற்காக பள்ளத்தை தோன்றினார்.

பில்லி சூனியம்: அந்த நேரம், நான் எதர்ச்சியாக வெளியில் சென்று பார்த்த போது தான், நள்ளிரவில் இருவம் இருப்பது தெரிந்தது. அது என்ன என்று விசாரித்த போது தான் அந்த விஷயமே எனக்கு தெரிந்தது. பள்ளம் தோண்டும் போது, என்னுடைய உதவியாளரும் கூட இருந்ததால், அவரிடம் விசாரித்தேன். அவரை, மிரட்டி பில்லி சூனியம் வைக்க சொல்லி கிடைக்கிறார் என் அண்ணன். மேலும், அண்ணன் ரசத்தில் ஒரு பொடி போட சொன்னார் நான் முடியாது என்று சொன்னேன் என்ற விஷயத்தை என்னிடம் சொன்னார். அது என்ன பொடி என்று எனக்கு தெரியவில்லை. அதன்பின், என்னுடைய பிறந்தநாள் அன்று அண்ணன் பீர் வாங்கி வந்தார்.

ஸ்லோ பாய்சன்: அதில், ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துவிட்டார். அதை குடித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து பேதி ஆகி கொண்டே இருந்தது. இதனால், என் உடல்நிலை மிகவும் மோசமாகி மெலிந்துவிட்டேன். அதன் பிறகு தான் என்னுடைய கிட்னி பாதிக்கப்பட்டது. அதில், குதிரை மூடியை பொடி செய்து கலந்து இருக்கிறார். அது வயிற்றுப்பகுதியில் சென்று ஒட்டிக்கொண்டதால், தொடர்ந்து வயிற்றுபோக்கு ஏற்பட்டு என் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகும் நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் சிரமப்பபட்டேன் என்று பொன்னம்பலம் அந்த பேட்டியில் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X