Ponnambalam: 750 ஊசி.. எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.... பொன்னம்பலம் கண்ணீர் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி பொன்னம்பலம், பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். இவர் சரத்குமார் நடித்த நாட்டாமை படம் திருப்புமுனையான அமைந்தது. அந்த படம் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவர் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்த போது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத நிலையில் தனக்கு உதவ வேண்டும் என வீடியோவில் பேசியதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு உதவி செய்தார். தற்போது ஓரளவிற்கு உடல் நலம் தெறி இருக்கும் பொன்னம்பலம், Galatta Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Ponnambalam Painful Interview
Photo Credit:

பொன்னம்பலம்: அதில், நான் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது முதன் முதலில் எனக்கு உதவி செய்தது சரத்குமார் சார் தான். பின் அவரே பலரிடம் சிபாரிசு செய்தார். அதன் பிறகு தான் கே.எஸ் ரவிக்குமார், தனுஷ், அர்ஜூன், சிரஞ்சீவி என பலரும் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், என் மனசு நிறையும் அளவிற்கு உதவி செய்தார்கள்.

எதிரிக்கும் வரக்கூடாது: சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் அதை மாற்ற வேண்டும், இன்னும் ஒரு வருடம் தான் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்றால், சிறுநீரக பாதித்தால், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்துவிடும். உலகத்திலேயே மிகவும் கொடுமையான தண்டனை டயாலிசிஸ் செய்வது தான். இந்த நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், உடம்பில் இரண்டு ஊசி போட்டு உடம்பில் இருக்கும் ரத்தத்தை எடுத்துவிட்டு, டயாலிசிஸ் செய்வார்கள். இதற்காக கிட்டத்தட்ட 750 முறை நான் ஊசி போட்டு இருக்கிறேன். இதை நான், நான்கு வருடமாக செய்தேன், உண்மையில் கொடுமையான விஷயம் இதுதான்.

சிரஞ்சீவி செய்த உதவி: நான் தொடர்ந்த மது குடித்ததால் தான் இந்த நிலைமை என்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. அதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மிகவும் கஷ்டப்பட்டேன். கடவுளின் புன்னியத்தில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தது சிரஞ்சீவி சார் தான், அவர் தான் எனக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்தார். என் வாழ்க்கையில் முதல் பாதியில் எனக்கு சில கடமைகள் இருந்தது. அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அதை நான் செய்துவிட்டேன். அடுத்து, நல்ல மனைவி, குழந்தைகள் அதுவும் நல்லபடியாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இந்த வீட்டில் ஒரு உதவியாளருடன் நான் தனியாகத்தான் இருக்கிறேன். பண உதவி செய்து, பலர் எனக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள் அதுவே எனக்கு போதும் என பொன்னம்பலம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X