மகனின் பிரிவு..மனஅழுத்தத்தில் இருந்த ரகுவரன்.. இறப்புக்கு காரணம் இதுதான்..கண்கலங்கிய சகோதரன்!

சென்னை: நடிகர் ரகுவரன் உயிரிழப்புக்கு முன் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தார் என்று அவரது சகோதரர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரகுவரன். 1982ல் வெளிவந்த வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

குணச்சித்திரம், வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்த ரகுவரன் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆண்டுகள் பல கடந்த பின்பும் இன்று வரை பேசப்படுகிறது.

Villain Actor Raghuvaran Brother emotional interview

பிரிந்தனர்: நடிகை ரகுவரன், நடிகை ரோகிணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரிஷி என்ற மகன் இருக்கும் நிலையில், இருவரும் 2004ம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் தனியாக வசித்து வந்த ரகுவரன் 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.

மன அழுத்தத்தில் இருந்தார்: இந்நிலையில், ரகுவரனின் சகோதரர் ரமேஷ்வரன் யூடியூப் சேனல் ஒன்றில், ரகுவரன் குறித்து பல விஷயங்களை பேசி உள்ளார். அதில் படத்தில் பார்க்கும் ரகுவரன் வேறமாதிரி இருப்பார்.ஆனால் நிஜத்தில் ரகுவரன் ரொம்ப சென்சிடிவ் கேரக்டர். அவரது குடும்பத்தில் பர்சனல் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள், சில கருத்துவேறுபாடுகளால் அவர் மன அழுத்தத்தில் இருந்தார். மகன் ரிஷி மீது அவருக்கு அளவு கடந்த அன்புவைத்திருந்தார்.

மகனை பிரிந்தார்: திடீரென ரிஷியை பிரிந்து சென்றதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆரம்பத்தில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. பின் அந்த பழக்கத்தை விட்டார், சில பிரச்சனைகளால் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். அந்த விஷயத்தை இப்போது நான் சொல்லவிரும்பவில்லை. ஆனால், கடைசி காலத்தில் எல்லாக் கெட்டப்பழக்கத்தையும் விட்டுவிட்டார் என்றார்.

கடைசி படம்: மேலும், யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் தந்தையாக நடிக்கும்படி ரகுவரனை இயக்குனர் கேட்டுக் கொண்டார். அந்த படத்தின் கதை ரகுவரனுக்கு பிடித்துப் போனது. படத்தின் கதையில் தனுஷ் தனது மகன் ரிஷியை நினைவு படுத்தியதால் அந்த படத்தில் நடிப்பதாக ரகுவரன் ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் டப்பிங் முடித்த பின், ரகுவரன் சோகமாகவே இருந்தார், யாருடனும் பேசாமலே இருந்தார். கடைசியில் இந்த முன்பாகவே ரகுவரன் உயிரிழந்துவிட்டார் என்று அவரது சகோதரர் பேட்டியில் கண்கலங்கி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X