மெய் பேசும் பொய் நாயகி
பொய் நாயகி விமலா ராமன் மனதில் பட்டதை பட்டென்று பேசும் மெய் நாயகியாக இருக்கிறார். ஒரு படத்திலாவது விபச்சாரப் பெண் வேடத்தில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம் விமலா ராமன்.
தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது போல்டான நாயகிகள் வருவது வழக்கம். லேட்டஸ்டாக வந்து காணாமல் போனவர்தான் விமலா. பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பொய் படத்தின் நாயகியாக வந்தவர்தான் விமலா ராமன்.ஆஸ்திரேலியாவிலிருந்து கொய்து வரப்பட்ட கோல்டன் கேர்ள்தான் விமலா ராமன். விமலா ராமனின் வெளிப்படையான பேச்சும், தில் நடிப்பும் பாலச்சந்தரை கவர அவரை தனது படத்தின் நாயகியாக்கினார் பாலச்சந்தர்.
முதல் படத்திலே நடிப்பில் முத்திரை பாதித்த விமலா அதன் பின் தமிழ் படங்களில் காணவில்லை. தற்போது மலையாளத்தில் பிஸியாக இருக்கிறார் இந்த ஆஸ்திரேலிய தமிழச்சி.
என்னாச்சு தமிழ் என்று விமலாவிடம் கேட்டபோது,
பொய் படத்துக்கு பிறகு தமிழில் அடுத்த படத்திற்காக காத்திருந்தேன். அந்த சமயம் பார்த்து மலையாளப் படம் ஒன்று வந்தது.
சரி வந்த வாய்ப்பை விட வேண்டாமே என்றுதான் மலையாளத்துக்குப் போய் விட்டேன். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் டைம் என்ற படத்தில் நடித்துள்ளேன். இதில் பூக்காரியாக நடித்துள்ளேன்.
இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேலும் 3 படங்கள் வந்துள்ளது. அதிலும் நடித்து வருகிறேன்.
எனக்கென்று சில ஆசைகள் உள்ளன. ஒரு படத்திலாவது விபச்சாரப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது அதில் ஒன்று. புதுப்பேட்டையில் சினேகா அதுபோல நடித்ததைப் பார்த்த பிறகு அந்த ஆசை கூடி விட்டது.
எனக்கு கிளாமர் பிடிக்காத ஒன்றல்ல. கிளாமர் இல்லாமல் சினிமா கிடையாது. அதேசமயம், அறுவறுப்பாகவும், முகம் சுழிக்காத வகையிலும் கிளாமர் என்றால் எனக்கு ஓகே.தான் என்கிறார் விமலா ராமன்.
மெய் பேசுவதிலும் பொய் நாயகி படு தில்தான்.


Click it and Unblock the Notifications











