»   »  விந்தியாவின் அழுவாச்சி காவியம்!

விந்தியாவின் அழுவாச்சி காவியம்!

Subscribe to Oneindia Tamil

கலை நிகழ்ச்சிக்காக பஹ்ரைன் போன விந்தியா, சென்னை விமான நிலையத்தில் தனது செல்போனை தொலைத்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்.

உடல் ஊனமுற்ற குழந்தைகள் விளையாட்டு அமைப்புக்காக நிதி திரட்ட சமீபத்தில் பஹ்ரைனில் ஒரு கலைஇரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விந்தியா, பாடகி சயனோரா, கானா உலக நாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதற்காக அனைவரும் சென்னையிலிருந்து பஹ்ரைன் கிளம்பினர். கிட்டத்தட்ட 10 மணி நேரப் பயணத்திற்குப்பின்னர் பஹ்ரைனை அடைந்தார் விந்தியா. நள்ளிரவு வாக்கில் பஹ்ரைனை அடைந்த அவர், வந்த விஷயத்தைவீட்டுக்குச் சொல்லி விடலாம் என நினைத்து செல்போனை எடுக்க தனது ஹேண்ட் பேக்குக்குள் கையைவிட்டுள்ளார்.

ஆனால் மொபைலைக் காணவில்லை. சென்னை விமான நிலையத்திலேயே அதை யாரோ சுட்டு விட்டார்கள்.இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளானார் விந்தியா. காணாமல் போன செல்லின் விலை 30 ஆயிரமாம். ஆனால்விலையை விட அதில் இருந்த எண்கள் எல்லாம் போய் விட்டதே என்ற கவலைதான் விந்தியாவை வாட்டிவிட்டதாம்.

தொலைந்து போன செல் போனில் மிக மிக முக்கியமான வி.ஐ.பிக்களின் எண்கள், நடிகர்களின் செல்போன்எண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், அட அவரோட அப்பாவோட எண் கூட இதில்தான் இருந்ததாம்.

நினைவில் யாருடைய நம்பரும் இல்லாததால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் போய் பஹ்ரைனில்இருந்த நாட்களை மிகவும் கஷ்டப்பட்டு தள்ளி விட்டு 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.வந்தவுடன், தனது தொலைபேசி எண்ணை முடக்கியுள்ளார்.

என்னப்பா இப்படியாகிப் போச்சு என்று விந்தியாவிடம் துக்கம் விசாரித்தபோது, மனசே சரியில்லைப்பா.என்னோட அப்பா நம்பர் கூட எனக்கு ஞாபகத்தில் வராமல் போய் விட்டது. நான் எல்லா எண்களையும் அந்தமொபைலில்தான் பதிவு செய்து வைத்திருந்தேன்.

டைரியில் கூட எழுதி வைத்துக் கொள்ள மாட்டேன். அந்த மொபைலை நம்பித்தான் இருந்தேன். களவாணிப்பயலுக அதை சுட்டுட்டாங்களே என்று புலம்பித் தள்ளுகிறார் விந்தியா.

சரி அத விடுங்க, நீங்களும், சங்கவியும் சேர்ந்து படம் எடுக்கப் போறீங்களாமே என்று டிராக்கை மாற்றினோம்.இரண்டு பேரும் நல்ல தோழிகள். எங்களது மனக் கஷ்டத்தை, சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம். மற்றபடி படம் எடுக்கப் போகும் ஐடியாவெல்லாம் இப்போதைக்கு இல்லப்பா.பெரிய அழுவாச்சி காவியமாவுல்லா போச்சு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil