»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

விந்தியா.. தமிழில் லட்சணமான முகம் கொண்ட நடிகைகளில் ஒருவர்.

திருப்பதியைப் பூர்வீகமாகக் கொண்டவிந்தியாவை தமிழ் திரையுலகம் கைநீட்டி வரவேற்றது. சங்கமம் படத்தில் அறிமுகமானார்.

ஆனால், தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புக்கள் வரவில்லை.

இதனால் வருமானத்துக்காக இவரது பெற்றோரே இவரை விபச்சாரத்தில் தள்ளப் பார்க்க வெறுத்துப் போய் வீட்டைவிட்டு வெளியே வந்தார். சினிமாவில் சான்ஸே கிடைக்காததால் கவர்ச்சி ஆட்டத்துக்கு வந்தார்.

டிவியில் நடித்தார். இப்போது ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டு பிரபு போன்ற ஓல்டுகளுக்கும், விவேக் மாதிரி காமெடிபார்டிகளுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படியும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் இப்போது தெலுங்குப் படங்களில் வில்லி வேடத்தில் நடிக்கஆரம்பித்துள்ளார் விந்தியா.

தமிழ் திரையுலகில் தனக்கு தொடர் அவமானங்கள் ஏற்பட்டதாக விந்தியா கருதுகிறார்.

ஹீரோயினாக நடிக்கஎனக்கு முகமும், உடலும் இருந்தும் என்னை சில முன்னணி ஹீரோக்கள் திட்டமிட்டு புறக்கணித்தனர்.

ராசியில்லாதவள் என ஒதுக்கினர். அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் பணிந்து போகாதது தான் காரணம்.

இப்போது வில்லி வேடம் செய்தாலும் தெலுங்கில் நான் மகிழ்சியாகவே இருக்கிறேன். ஹீரோயினோ, வில்லியோ,ஒரு பாட்டுக்கு டான்சோ எந்த ரோல் என்றாலும் உடைகளை முடிந்தவரை குறைக்கச் சொல்கிறார்கள்.

எனக்கு வேறு வழியில்லை.

இப்போதைக்கு பணம் தான் முக்கியம். எந்த ரோலில் எப்படியும் நடிக்க நான் தயார் என வெளிப்படையாகபேசுகிறார் விந்தியா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil