Exclusive: ஜெய்பீம் சூர்யா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.. விசாரணை கைதி ஹீரோயின் ஸ்ருதி ரெட்டி பேட்டி!

சென்னை: இயக்குநர் ஜெயபிரகாஷ் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்து வரும் 'விசாரணை கைதி' படத்தின் நாயகி ஸ்ருதி ரெட்டி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான ஸ்ருதி ரெட்டி மெரினா புரட்சி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேத் விசாரணை கைதி படத்தின் ஹீரோயின் இவர் தான் என்கிற பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

 Visaranai Kaithi Actress Shruthi Reddy Exclusive Interview

15 வயதிலேயே நடிக்க ஆரம்பிச்சிட்டேன்: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ரெட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது சினிமா வாழ்க்கையை 15 வயதிலேயே தொடங்கி விட்டதாக கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு 15 வயது இளம் பெண்ணாக ஒன்றுமே தெரியாமல் சினிமா ஆர்வத்துடன் நடிக்க வந்தேன். நடிகர் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தில் ஒரு சிறிய ரோல் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

 Visaranai Kaithi Actress Shruthi Reddy Exclusive Interview

விசாரணை கைதி பட ஹீரோயின்: ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவான மெரினா புரட்சி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானேன். அந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. சினிமாவில் சின்ன சின்னதாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஜெயபிரகாஷ் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் சார் ஹீரோவாக நடித்து வரும் விசாரணை கைதி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி உள்ளேன். இந்த படத்தில் நான் ஒரு வழக்கறிஞராக நடித்து வருகிறேன் எனது கதாபாத்திரத்தின் பெயர் திலகவதி என்றார்.

 Visaranai Kaithi Actress Shruthi Reddy Exclusive Interview

ஜெய்பீம் சூர்யா தான் இன்ஸ்பிரேஷன்: சில பிரபலங்களின் மரணங்கள் எப்படி நடந்தது என்றே தெரியாமல் சஸ்பென்ஸாக இருக்கும் அல்லவா? அது போன்ற தான் ஒரு மரணத்தில் விசாரணை கைதியாக சிக்கும் ஒருவரின் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் வழக்கறிஞராக நீங்க நடிக்கிறீங்க என்று சொன்னதும் நான் சூர்யா சார் நடிச்ச ஜெய்பீம் படத்தைத் தான் போட்டுப் போட்டு பார்த்து வருகிறேன். அவர் தான் என் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அவர் மாதிரி எல்லாம் நடிக்க முடியாது. ஆனால், அவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்ட மாணவியாக நிச்சயம் இந்த படத்தில் நடித்து வருகிறேன் என நம்புகிறேன் என புன்னகையுடன் பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ரெட்டி.

களரி, பாக்ஸிங் தெரியும்: நான் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக்குங்க.. பாடியை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருப்பது ரொம்பவே பிடிக்கும். தற்காப்பு கலைகள் மீது அதிக நாட்டம் இருக்கு.

பாக்ஸிங், களரி உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுக் கொண்டு வருகிறேன். ஆக்‌ஷன் ரோல்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்க வேண்டுமல்லவா என தனது பேட்டியில் கலகலப்பாக பேசி உள்ளார்.

 Visaranai Kaithi Actress Shruthi Reddy Exclusive Interview

மோடிவேஷனல் ஸ்பீச் கொடுக்கிறேன்: சினிமாவை தவிர்த்து சமூகத்தின் மீதும் எனக்கு கொஞ்சம் அக்கறை இருக்கு, Soul Success for Life என ஒரு நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறேன். அதன் மூலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு மனநலம் சம்பந்தப்பட்ட மோடிவேஷனல் ஸ்பீச்சும் கொடுத்து வருகிறேன் என ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் ஸ்ருதி ரெட்டி பகிர்ந்து கொண்டார்.

கூடிய விரைவிலேயே அவர் நடித்து வரும் விசாரணை கைதி திரைப்படம் வெளியாக போகிறதாம்.

அந்த படங்களில் நான் நடிக்கவே இல்லை: ஆவிக்குமார் மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்ளிட்ட படங்களில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், அந்த படங்களில் நான் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால், இன்னமும் நான் அந்த படங்களில் நடித்துள்ளேன் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நான் அந்த படங்களில் நடிக்கவே இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் ஸ்ருதி ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X